சுவிஸில் பற்றியெரிந்த லொறி... 5 கிலோமீற்றருக்கு போக்குவரத்து நெரிசல்
சுவிட்சர்லாந்தில் Gotthard சுரங்க பாதைக்கு வெளியே லொறி ஒன்று தீ விபத்தில் சிக்கி கொழுந்துவிட்டெரிய, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
யூரி மாநிலத்தின் வாஸன் பகுதியிலேயே திங்கட்கிழமை பகல் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வாஸன் மற்றும் Göschenen பகுதிக்கு செல்லும் மொத்த வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன.
அதிர்ஷ்டவசமாக Gotthard சுரங்க பாதைக்கு வெளியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலை அடுத்து யூரி மாநில பொலிசாரும் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினரும் திரண்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
லொறி தீப்பற்றிய விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. நண்பகலுக்கு முன்னர் சுரங்க பாதையும் திறந்துள்ளதாக தகவல் வெளியானது.
சுரங்க பாதை மூடப்பட்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் 5 கிலோமீற்றர் தொலைவு வரை காணப்பட்டதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி பயணிகளுக்கு 50 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.