உடனடி போர்நிறுத்தம்! ட்ரூடோவுடன் விவாதித்த பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்
நேட்டோ உச்சி மாநாட்டில் காஸாவில் நிலவும் மோசமான சூழல் குறித்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் விவாதித்தார்.
நேட்டோ உச்சி மாநாடு
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) கலந்துகொண்டார்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை (Justin Trudeau) சந்தித்து பேசிய கெய்ர் ஸ்டார்மர், அவருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு கூட்டாண்மையை ஆழப்படுத்துதல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துதல் உள்ளிட்ட பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னேற்றுவதற்கான வாய்ப்பை வரவேற்றார்.
பின்னர் இருநாட்டு தலைவர்களும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் அதன் உலகளாவிய தாக்கங்கள் குறித்து விவாதித்தனர். மேலும், காஸாவில் நிலவும் மோசமான சூழல் குறித்து இருவரும் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர்.
உலகளாவிய அமைதி
அத்துடன் உடனடி போர்நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவித்தல், காசா முழுவதும் மனிதாபிமான உதவிகளில் குறிப்பிடத்தக்க மற்றும் நீடித்த அதிகரிப்பு மற்றும் நெருக்கடிக்கு நீடித்த முடிவு ஆகியவற்றுக்கான முன்மொழிவுக்கு தலைவர்கள் தங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினர்.
ட்ரூடோ மற்றும் ஸ்டார்மர் இருவரும் கனடாவிற்கும், ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான வலுவான பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளில், நேட்டோ கூட்டணியை தொடர்ந்து பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், வழக்கமான தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டதாகவும் கனேடிய அரசு அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு குறித்து பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ, ''இன்று வாஷிங்டனில் முதல்முறையாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உடன் உரையாடினேன். கனடாவும், பிரித்தானியாவும் உக்ரைனை ஆதரிப்பது முதல் அட்லாண்டிக் பெருங்கடலின் இருபுறமும் பாதுகாப்பில் முதலீடு செய்வது வரை இப்போது மிக முக்கியமான வேலைகளில் நட்பாக உள்ளன. மேலும் பல பயனுள்ள சந்திப்புகளை எதிர்பார்க்கிறேன் நண்பரே'' என கூறியுள்ளார்.
Sat down with Prime Minister @KeirStarmer for the first time in D.C. today.
— Justin Trudeau (@JustinTrudeau) July 11, 2024
Canada and the U.K. are partners in so much vital work right now, from supporting Ukraine, to investing in defence on both sides of the Atlantic.
Looking forward to many more productive meetings, my… pic.twitter.com/1B2tivFBub
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |