நவல்னியின் மரணம் சோகம்., புடினை அரக்கன் என்று அழைத்த ட்ரூடோ
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம் தொடர்பில், விளாடிமிர் புடினை அரக்கன் என்று கூறியுள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) மிகப்பாரிய எதிரியான அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) பிப்ரவரி 16 அன்று இறந்தார்.
இதற்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நவல்னியின் மரணச் செய்தியைக் கேட்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), புடினை ஒரு அரக்கன் (Monster) என்று அழைத்தார்.
அவர் கூறியதாவது., "நவல்னியின் மரணம் ஒரு சோகம். ரஷ்ய மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடும் எவருக்கும் புடின் எவ்வளவு தூரம் நடவடிக்கை எடுப்பார் என்பதை இது காட்டுகிறது. நவல்னியின் மரணம் புடின் ஒரு அசுரன் என்பதைக் காட்டுகிறது" என்று கூறியுளளார்.
இதனிடையே, ரஷ்யாவில் நவல்னிக்கு அஞ்சலி செலுத்த வந்த 100க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மாஸ்கோவில் நவல்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களை ரஷ்ய பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர். 10 நகரங்களில் 100க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Vladimir Putin, Justin Trudeau, Alexei Navalny, Vladimir Putin monster