நாற்காலியுடன் வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்
கனேடிய பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதை அடுத்து அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பதவி விலகிய ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) அரசியல் நெருக்கடி காரணமாக ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஜனவரி மாதம் லிபரல் கட்சியின் தலைமைக்கான போட்டி தொடங்கியதுடன், கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
இறுதியில் லிபரல் கட்சியின் தலைமைப் போட்டியில் மூன்று போட்டியாளர்களை வீழ்த்தி கனடா மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கிகளின் முன்னாள் ஆளுநரான மார்க் கார்னி(Mark Carney), கனடாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார்.
ட்ரூடோ புகைப்படம் வைரல்
புதிய பிரதமராக மார்க் கார்னி எதிர்வரும் நாட்களி பதவியேற்க உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் ஜஸ்டின் ட்ரூடோ தனது அலுவலகத்தில் இருந்து நாற்காலி ஒன்றை தூக்கி செல்வதை பார்க்க முடிகிறது.
சிசிடிவி கேமராவில் படம் பிடிக்கப்பட்டது போல் இருக்கும் அந்த புகைப்படத்தில் கிண்டல் செய்யும் விதமாக அவர் தனது நாக்குகளை வெளியே நீட்டியப்படி தோற்றமளிக்கிறார்.
புகைப்படத்திற்கு எதிர்வினையாற்றியுள்ள சில சமூக வலைதள பக்கங்கள் ஜஸ்டின் ட்ரூடோவுடன் சேர்த்து அவரது நாற்காலியும் ராஜினாமா செய்துள்ளது போல் தெரிவதாக குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |