கனேடிய பாலஸ்தீனியர்கள் கவலையில் இருக்கிறார்கள்! முக்கிய நபரை சந்தித்ததாக பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ
தங்கள் அன்புக்குரியவர்களின் உரிமைகள், பாதுகாப்பது குறித்து கனடாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் கவலையுற்றுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
8,300 பாலஸ்தீனியர்கள்
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் 8,300 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், போர் நிறுத்தம் செய்வதற்கான உலகளாவிய கோரிக்கைளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
இதற்கிடையில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், காஸாவில் உள்ள மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிக்கித் தவிப்பதாக ஐ.நா பிரதிநிதி தெரிவித்தார்.
X/@UNTreatyBodies
இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இஸ்லாமியர் வெறுப்பு மனநிலையை எதிர்த்து போராடுவதற்கான கனடாவின் சிறப்புப் பிரதிநிதி அமிரா எல்காவாபியை நேரில் சந்தித்து பேசினார்.
ட்ரூடோவின் பதிவு
அவருடன் உரையாடியது குறித்த புகைப்படத்தை பகிர்ந்த ட்ரூடோ அவரது பதிவில், 'கனேடிய முஸ்லீம்கள், அரேபியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் தங்கள் அன்புக்குரியவர்கள், அவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறார்கள்.
நான் நேற்று அமிரா எல்காவாபியை சந்தித்தபோது இந்த அச்சங்கள் மற்றும் இஸ்லாமியர் வெறுப்பு மனநிலை மற்றும் அனைத்து வகையான வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினோம்' என தெரிவித்துள்ளார்.
Canadian Muslims, Arabs, and Palestinians are worried about their loved ones, their rights, and their safety. When I met with @AmiraElghawaby yesterday, we spoke about these fears and the work we must continue to do together to combat Islamophobia and all forms of hatred. pic.twitter.com/vR3QByEkpd
— Justin Trudeau (@JustinTrudeau) October 31, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |