40 ஆண்டுகளாக கனேடியர்களுக்கு சேவையாற்றிய பெண்மணி ஓய்வு: புதிய பொறுப்பினை அறிவித்த ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் அமைச்சரவை செயலாளர் மற்றும் பிரைவி கவுன்சிலின் எழுத்தராக பணியாற்றிய ஜெனிஸ் சாரெட்டே ஓய்வு பெறும் நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவருக்கு பிரியாவிடை அளித்துள்ளார்.
40 ஆண்டுகால பணி
ஜெனிஸ் சாரெட்டே கனடாவின் அமைச்சரவை செயலாளராக ஏறக்குறைய 40 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், சூன் மாதம் ஓய்வு பெற உள்ளார்.
இதனை அவரே இன்று அறிவித்த நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சாரெட்டின் வரவிருக்கும் ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
After working in service of Canada and Canadians for nearly 40 years, Janice Charette is retiring in June. As Clerk of the Privy Council, her advice and her leadership has been extremely valuable – and I am incredibly grateful. Thank you, Janice. https://t.co/sHEoQEv10l pic.twitter.com/JDY0TP26tS
— Justin Trudeau (@JustinTrudeau) May 31, 2023
நன்றி கூறிய ஜஸ்டின் ட்ரூடோ
மேலும், கனடா மற்றும் கனேடியர்களுக்கான அவரது சுமார் 40 ஆண்டுகால சேவைக்காகவும், எழுத்தராக பணியாற்றும் இரண்டாவது பெண் என்பதற்காகவும் நன்றி கூறினார்.
அத்துடன் பொதுச் சேவையில் சாரெட்டின் பங்களிப்பு மற்றும் கௌரவிக்கும் விதமாகவும், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக கனடாவிற்கான அரச பிரைவி கவுன்சிலின் உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.