வாட்ஸ் அப்பில் மோசடி அழைப்புகள்! இனி எளிதாக கண்டறியலாம்- எப்படி பயன்படுத்துவது?
வாட்ஸ்-அப் மூலமாக வெளிநாட்டு நம்பர்களில் இருந்து மோசடி அழைப்புகள் மற்றும் ஸ்பேம் மெசேஜ்களை கண்டறிய ட்ரூகாலர் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது.
அதிகரிக்கும் மோசடி அழைப்புகள்
பொதுமக்களை நூதன முறையில் ஏமாற்றும் மோசடி கும்பல்கள் தற்போது ஆன்லைன் வழியாக மக்களை எளிதாக தொடர்பு கொள்கின்றனர். இதற்காக அவர்கள் நேரடி தொலைபேசி அழைப்புகள் முதல் மெசேஜிங் செயலிகளான வாட்ஸ்-அப் ஆகிய தளங்களை பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் சுமார் 50 கோடிக்கு மேல் வாட்ஸ்-அப் பயனர்கள் செயல்பாட்டில் இருக்கும் நிலையில், இவற்றில் வரும் பெரும்பாலான தெரியாத அழைப்புகள் மற்றும் ஸ்பேம் மெசேஜ்கள் வெளிநாட்டு Country Code-ஐ கோடுகளை கொண்டு காணப்படுகிறது.
இந்தியாவில் இவ்வாறு மோசடி மற்றும் டெலி மார்க்கெட்டிங் சார்ந்து மாதத்திற்கு 17 அழைப்புகள் ஒவ்வொரு நபருக்கும் சராசரியாக வருவதாக 2021ல் வெளியான அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
ட்ரூகாலர் புதிய முயற்சி
இந்நிலையில் இவ்வாறு வாட்ஸ் அப்-களில் வரும் மோசடி அழைப்புகள் மற்றும் ஸ்பேம் மெசேஜ்களை பயனர்கள் அடையாளம் காண மெட்டா நிறுவனத்துடன் இணைந்து ட்ரூகாலர் நிறுவனம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் மோசடி அழைப்புகள் மற்றும் ஸ்பேம் தொடர்புகளை எளிதாக கண்டறிந்து அவற்றை பயனர்கள் சுலபமாக பிளாக் செய்ய முடியும்.
ஆனால் இந்த வசதி தற்போதைக்கு பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் இந்த சேவை அனைவருக்கும் கிடைக்கும் என ட்ரூகாலர் CEO ஆலன் மாமெதி உறுதியளித்துள்ளார்.
அழைப்புகளை வாட்ஸ்-அப்பில் ட்ரூகாலர் மூலம் எப்படி அடையாளம் காண்பது
முதலில் பயனர்கள் தங்கள் பிளே ஸ்டோரில் உள்ள ட்ரூகாலர் பீட்டா புரோகிராமில் இணைய வேண்டும்.
Reuters
பின் ட்ரூகாலர் பீட்டா அப்டேட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து, அந்த செயலியின் செட்டிங்ஸ்-க்கு சென்று <காலர் ஐடி><வாட்ஸ் அப்> போன்ற மெசேஜிங் அப்களை ட்ரூ காலரில் அடையாளம் காணும் வகையில்