நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியிடைநீக்கம்: நாடொன்றின் அதிரடி நடவடிக்கை
துருக்கி, தன் நாட்டு மருத்துவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பணியிடைநீக்கம் செய்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியிடைநீக்கம்
துருக்கி நாடு, நூற்றுக்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்களை பணியிடைநீக்கம் செய்துள்ளதுடன் அவர்களுக்கு அபராதமும் விதித்துள்ளது.

அத்துடன், மீண்டும் கட்டாய மருத்துவப் பயிற்சி மேற்கொள்ளவும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
அதாவது, துருக்கியில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது.
துருக்கி, OECD நாடுகள் என அழைக்கப்படும் 38 நாடுகள் கொண்ட அமைப்பில் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த அமைப்பிலுள்ள நாடுகளிலேயே துருக்கியில்தான் அதிக பெண்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
2023ஆம் ஆண்டு நிலவரப்படி, பிரசவிக்கும் 1,000 பெண்களில் 615 பேர் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம்தான் குழந்தை பெற்றுள்ளார்கள். அதாவது, 10இல் 6 பேர் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவித்துள்ளார்கள்.
ஆகவே, 2025ஆம் ஆண்டு, தனியார் மருத்துவமனைகள் சரியான மருத்துவக் காரணம் இன்றி சிசேரியன் முறையில் பிரசவம் பார்க்க துருக்கி அரசு தடை விதித்தது.
ஆக, சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிப்போர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில்தான் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்களை பணியிடைநீக்கம் செய்துள்ளதுடன் அவர்களுக்கு அபராதமும் விதித்துள்ளது துருக்கி அரசு.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |