இந்தியா மீது 500% வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை! கடுமையாக பாதிக்கப்படப்போகும் மற்றொரு நாடு
இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 500 சதவீதம் வரி விதிக்கப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடுமையான மசோதா
ரஷ்யாவுக்கு எதிரான மிகக் கடுமையான மசோதாவை கொண்டுவரப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். 
அந்நாட்டின் எரிசக்தி பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு, அபராதம் விதிக்கும் நோக்கில் குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவை உருவாக்கி வருகின்றனர்.
அத்துடன் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பொருட்கள் மீது கடுமையான வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது ரஷ்யாவின் இரண்டாவது பாரிய எண்ணெய் வாங்குபவரான இந்தியாவை நேரடி அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. 
உலக சந்தைகளில் அதிர்ச்சி அலை
500 சதவீதம் வரை இறக்குமதி வரிகளை விதிக்கக்கூடிய ஒரு சட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் அறிவிப்பதன் மூலம் உலக சந்தைகளில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளார். இதில் எரிசக்தி கொள்முதல்களும் அடங்கும்.
இந்திய மட்டுமின்றி ஈரான் கூட இந்த கடுமையான தடைப்பட்டியலில் சேர்க்கப்படலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பினால் மிகப்பெரிய நாடான சீனாவும் மிகவும் பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |