இளவரசர் ஆண்ட்ரூ மீது குற்றம் சாட்டிய இளம்பெண் விவகாரம்: ட்ரம்ப் தன்னிலை விளக்கம்
பிரித்தானிய இளவரசரும், மன்னர் சார்லசின் தம்பியுமான ஆண்ட்ரூ, பருவம் எய்தாத தன்னுடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாக இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டிய விடயம் ராஜ குடும்பத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம்.
இளவரசர் ஆண்ட்ரூ மீது குற்றம் சாட்டிய இளம்பெண்
விர்ஜினியா (Virginia Giuffre) என்னும் இளம்பெண், இளவரசர் ஆண்ட்ரூ, பருவம் எய்தாத தன்னுடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் சீரழித்து, பல செல்வந்தர்களுக்கு இரையாக்கிவந்தார் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்னும் அமெரிக்கக் கோடீஸ்வரர்.
அவரது மாளிகையில், இளவரசர் ஆண்ட்ரூவும் விர்ஜினியாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாக, ராஜ குடும்பத்தில் பெரும் பரபரப்பு உருவானது. கிட்டத்தட்ட குடும்பத்தை விட்டு தள்ளிவைக்கப்பட்டார் ஆண்ட்ரூ.
ட்ரம்ப் தன்னிலை விளக்கம்
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பும் சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீனும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களும் வெளியாகின.
ஆனால், எப்ஸ்டீன் குறித்த ஆவணங்களை வெளியிடுவதாக தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியிருந்தார் ட்ரம்ப். அது தொடர்பில் இப்போதும் பெரிய அரசியல் நடந்துகொண்டிருப்பது வேறு விடயம்.
இந்நிலையில், எப்ஸ்டீன் தனது Mar-a-Lago ஸ்பாவில் வேலை செய்த இளம்பெண்களை திருடிக்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார் ட்ரம்ப்.
தனது ஸ்பாவிலிருந்து பணியாளர்களை எடுத்துக்கொள்ளவேண்டாம் என தான் வற்புறுத்தியும் எப்ஸ்டீன் கேட்கவில்லை என்று கூறியுள்ள ட்ரம்ப், இளவரசர் ஆண்ட்ரூவால் சீரழிக்கப்பட்ட விஜினியாவும் அவர்களில் ஒருவர் என தற்போது கூறியுள்ளார்.
விடயம் என்னவென்றால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த எப்ஸ்டீன் 2019ஆம் ஆண்டு ஆகத்து மாதம், தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.
அதேபோல, இளவரசர் ஆண்ட்ரூ மீது குற்றம் சாட்டியிருந்த விர்ஜினியாவும், இந்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |