குற்றப்பின்னணி இல்லாத புலம்பெயர்ந்தோரையும் கைது செய்யும் ட்ரம்ப் நிர்வாகம்
ட்ரம்ப் நிர்வாகம் குற்றப்பின்னணி கொண்ட புலம்பெயர்ந்தோரை கைது செய்துவரும் நிலையில், அமெரிக்காவில் குற்றப்பின்னணி இல்லாத புலம்பெயர்ந்தோரையும் கைது செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றப்பின்னணி இல்லாத புலம்பெயர்ந்தோர் கைது
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி குற்றப்பின்னணி கொண்ட புலம்பெயர்ந்தோரை ட்ரம்ப் நிர்வாகம் கைது செய்துவருவது பலரும் அறிந்ததே.
இந்நிலையில், அமெரிக்காவில் குற்றப்பின்னணி இல்லாத, ஆனால், வெளிநாடுகளில் குற்றம் செய்ததாக கூறப்படும் புலம்பெயர்ந்தோரையும் அதிகாரிகள் கைது செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வகையில், புலம்பெயர்தல் மற்றும் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளவர்களில் சுமார் 37 சதவிகிதம் புலம்பெயர்ந்தோர், அமெரிக்காவின் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடாதவர்கள் ஆவர்.
ட்ரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் ஆறு மாதங்களில் அமெரிக்காவில் குற்றப்பின்னணி உள்ளவர்களும், குற்றப்பின்னணி இல்லாதவர்களுமான புலம்பெயர்ந்தோரும் 92,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் கைது எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில், மே மாதம் வாக்கில் கைது எண்ணிக்கை குறைந்ததாகவும், அதைத் தொடர்ந்து, உள்நாட்டு பாதுகாப்புச் செயலரான கிறிஸ்டி நோயம் மற்றும் வெள்ளை மாளிகையின் Deputy Chief of Staff பதவி வகிக்கும் ஸ்டீபன் மில்லரும் நாளொன்றிற்கு 3,000 பேரையாவது கைது செய்யவேண்டும் என புலம்பெயர்தல் மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும், அதைத் தொடர்ந்து கைது எண்ணிக்கை அதிகரித்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |