இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள்; இது மோடியின் போர் - டிரம்ப் ஆலோசகர் விமர்சனம்
இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள் என டிரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது 50% வரி
2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்கா அதிபர் முயற்சித்து வருகிறார். இரு நாடுகளின் தலைவர்களுடன் அவர் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் போர் முடிவுக்கு வரவில்லை.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்த போரில் ரஷ்யாவின் நிதி ஆதாரத்திற்கு மறைமுகமாக இந்தியா வலு சேர்க்கிறது என குற்றஞ்சாட்டிய டிரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு கூறினார்.
ஆனால், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கி வருவதால், இந்தியாவை தண்டிக்கும் வகையில், இந்தியா பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தது.

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி
இந்த கூடுதல் வரி நேற்று முதல் அமுலுக்கு வந்த நிலையில், இதனால் இந்தியாவின் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள்
இது குறித்து பேசிய டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, "ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் 25% வரி தள்ளுபடி செய்யப்படும்.
மோடி சிறந்த தலைவர், இந்தியா ஒரு முதிர்ந்த ஜனநாயக நாடு. இந்தியா ஜனநாயக நாடுகளுடன் பக்கபலமாக இருக்க வேண்டும். ஆனால் சர்வாதிகாரிகளுடன் செல்கிறார்கள். சீனா உங்கள் பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளது. அவர்கள் உங்கள் நண்பர்கள் அல்ல.
ரஷ்யா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதில்லை என தெரிவித்துள்ளது. இதன் அர்த்தம் என்ன? ரஷ்யா இந்த பணத்தை போருக்கு நிதியளிக்கவும் அதிகளவிலான உக்ரைனியர்களை கொல்லவும் பயன்படுத்துகிறது.
இதனை சமாளிக்க உக்ரைன் அமெரிக்காவிடமும் ஐரோப்பாவிடமும் அதிக நிதியளிக்குமாறு கேட்கிறது. இவ்வாறாக அமெரிக்கர்களின் வரி பணம் செலவாகிறது. மோடியின் போருக்கு நாம் பணம் செலுத்த வேண்டியுள்ளது.
அமைதிக்கான குறைந்தபட்ச பாதை ஓரளவிற்கு டெல்லி வழியாக செல்கிறது. ஆனால் இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள். இது எங்கள் இறையாண்மை யாரிடம் வேண்டுமானாலும் எண்ணெய் வாங்குவோம் என கூறுகிறார்கள். இந்தியா ஜனநாயக நாடு. ஜனநாயக நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |