உக்ரைன் போர் முடிவுக்கு வருவது எப்போது? இன்று பேச்சுவார்த்தை நடத்தும் ட்ரம்பும் புடினும்
ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ஒப்பந்தம் தொடர்பில், இன்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.
இன்று ட்ரம்பும் புடினும் பேச்சுவார்த்தை
தனது சமூக ஊடகப்பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ட்ரம்ப், தான் செவ்வாயன்று காலை ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் உக்ரைன் போர் தொடர்பான ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இறுதி ஒப்பந்தம் ஒன்றின் பல விடயங்களுக்கு ஒப்புதலளிக்கப்பட்டுவிட்டது, என்றாலும், இன்னும் பல விடயங்கள் உள்ளன.
ஆயிரக்கணக்கான இளம் வீரர்களும் மற்றவர்களும் கொல்லப்படுகிறார்கள். இரு தரப்பிலும் ஒவ்வொரு வாரமும் 2,500 ராணுவ வீரர்கள் உயிரிழக்கிறார்கள். இது இப்போதே முடிவுக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |