போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் டிரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு: உலக அரசியலில் பரபரப்பு
வாடிகன் நகரில், போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கிற்கு முன்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பு, சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.// வெள்ளை மாளிகை வட்டாரங்களின்படி, இரு தலைவர்களின் உரையாடல் "மிகவும் ஆக்கப்பூர்வமாக" அமைந்தது.
இறுதிச் சடங்குகளுக்கு பின்னரும், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
Applause breaks out at the Vatican as Ukrainian President Volodymyr Zelenskyy arrives for the funeral of Pope Francis.
— ABC News (@ABC) April 26, 2025
Live updates: https://t.co/WY9GHQCTOj pic.twitter.com/JQPDx1BXX9
இறுதிச் சடங்கில் உலக தலைவர்கள் பங்கேற்பு
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், சர் கீர் ஸ்டார்மர், இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில், ஜெலென்ஸ்கியின் வருகை கூடியிருந்த கூட்டத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
பிரித்தானிய தூதர் கருத்து
ரஷ்யாவிற்கான முன்னாள் பிரிட்டிஷ் தூதர் சர் டோனி பிரெண்டன், இந்த சந்திப்பை "மிகப்பெரிய அரசியல் சந்திப்பு" என்று வர்ணித்தார்.
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு, சர்வதேச அரசியல் தலைவர்களுக்கு இடையே முக்கிய உரையாடல்களை நிகழ்த்த ஒரு அரிய வாய்ப்பை வழங்கியது என அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பு, உக்ரைன் போர் மற்றும் சர்வதேச அரசியல் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |