உக்ரைன் ரஷ்யா இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட புடின்
உக்ரைன் - ரஷ்யா இடையே ஒரு வார கால போர் நிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஒரு வார கால போர் நிறுத்தம்
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தலையீட்டை தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா இடையே ஒரு வார கால போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான இந்த ராஜதந்திர நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமைச்சரவை கூட்டத்தின் போது அறிவித்தார்.
.@SEPeaceMissions: "We had five Russian generals last Sunday in Abu Dhabi... and we think we made a lot of progress..."@POTUS: "Because of the cold, extreme cold... I personally asked President Putin not to fire on Kyiv and the cities and towns..." pic.twitter.com/UZAHSjTjVu
— Rapid Response 47 (@RapidResponse47) January 29, 2026
அதில், உக்ரைனில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக ஒரு வார காலத்திற்கு போர் நிறுத்தத்தை மேற்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புக் கொண்டு இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தலைநகர் கீவ் மற்றும் முக்கிய உக்ரைனிய நகரங்களில் கடும் குளிர் காரணமாக மக்கள் பெரும் அவதியடைந்து வருவதால் இப்பகுதிகளில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று தான் தனிப்பட்ட முறையில் புடினிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு புடின் ஒப்புக் கொண்டது வரவேற்கத்தக்கது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த போர் நிறுத்தம் 7 நாட்கள் வரை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், போர் நிறுத்தம் தொடர்பான செய்தியை உக்ரைன் முதலில் நம்பவில்லை என டிரம்ப் தெரிவித்தார்.

பின்னர், பனி மற்றும் கடுமையான குளிரால் அவதிப்பட்டு வரும் உக்ரைன் மக்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் டிரம்ப் விவரித்துள்ளார்.
உக்ரைன் கடும் குளிருக்கு மத்தியில் நாட்டின் உள்கட்டமைப்பு பாதிப்புகளையும் சந்தித்து வருவதால் இந்த போர் நிறுத்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |