அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு $1,776 சிறப்பு ஊக்கத்தொகை! டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகையை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ராணுவ வீரர்களுக்கு ஊக்கத்தொகை
சுமார் 14.5 லட்சம் அமெரிக்க ராணுவ வீரர்களின் சேவை மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் ஒரு முறை வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வாரியர் டிவிடெண்ட்(Warrior Devidend) என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தகுதியுள்ள இராணுவ வீரர்களுக்கும் சுமார் $1,776 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🚨 @POTUS announces "WARRIOR DIVIDENDS" — a $1,776 non-taxable lump sum payment for our great service members, already on its way. https://t.co/s9lVlknp6x pic.twitter.com/PsINTaUoVt
— Rapid Response 47 (@RapidResponse47) December 18, 2025
இந்த ஊக்கத்தொகையானது, அமெரிக்கா உருவான 1776 ம் ஆண்டை நினைவு கூறும் விதமாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கான நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஊக்கத்தொகையானது வீரர்களுக்கு சென்றடையும் என்றும் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
இந்த ஊக்கத்தொகைக்கான நிதியானது, வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வர்த்த வரி மற்றும் அழகான பெரிய மசோதா(Big Beautiful Bill) ஆகிய புதிய சட்ட மசோதா மூலம் உருவாக்கப்பட்டதாகவும் டிரம்ப் தன்னுடைய உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |