வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நான்..! டிரம்ப் அதிரடி அறிவிப்பு
வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னை தானே அறிவித்துக் கொண்டுள்ளார்.
சிறைப்பிடிக்கப்பட்ட மதுரோ
கடந்த ஜனவரி 3ம் திகதி அமெரிக்க இராணுவ படைகள் வெனிசுலா தலைநகர் மீது தாக்குதல் நடத்தியதோடு, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைப்பிடித்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தினர்.

மேலும் அவரை நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதுடன், தற்போது ப்ரூக்ளின் தடுப்பு சிறையில் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் அடைக்கப்பட்டுள்ளனர்.
டிரம்பின் வைரல் பதிவு
இந்நிலையில் உலக அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னை வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி என்று அறிவித்துள்ளார்.
அவரது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், விக்கிப்பீடியா பக்கம் போன்ற வடிவமைப்பில் அவரது புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவின் 45 வது மற்றும் 47வது ஜனாதிபதி என்று குறிப்பிட்டுள்ளதுடன், 2026 ம் ஆண்டு வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கூகுள் விக்கிப்பீடியாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இடம்பெறவில்லை என்பதுடன், சர்வதேச அமைப்புகளும் டிரம்பின் இந்த அறிவிப்பை இதுவரை அங்கீகரிக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |