அடுத்த இலக்கு மெக்சிகோவின் பெண் ஜனாதிபதி: தயாராகும் டொனால்ட் ட்ரம்ப்
மெக்சிகோவில் போதைப்பொருள் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா தரைத் தாக்குதல்களைத் தொடங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கை
தமது உலகளாவிய சக்திக்கு ஒரே வரம்பு அவரது சொந்த ஒழுக்கம் மட்டுமே என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த இராணுவ நடவடிக்கையை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
போதைப்பொருள் குழுக்களுக்கு எதிராக தரைவழித் தாக்குதலைத் தொடங்க இருப்பதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், போதைப்பொருள் குழுக்களே தற்போது மெக்சிகோவை இயக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவிற்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதே மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க இராணுவம் வெளிநாடுகளில் என்ன செய்ய முடியும் என்பதற்கு என்ன வரம்புகள் உள்ளன என்று கேட்டபோது,
என்னுடைய சொந்த ஒழுக்கம். என்னுடைய சொந்த முடிவுகள், அது மட்டுமே என்னைத் தடுக்க முடியும் என்று வெளிப்படையாக ட்ரம்ப் பதிலளித்திருந்தார்.

அமெரிக்க நடவடிக்கைகளுக்கான அடுத்த வரிசையில் கிரீன்லாந்து, கியூபா மற்றும் கொலம்பியா ஆகியவை இருக்கலாம் என்று ட்ரம்ப் குறிப்பிட்ட நிலையில், தற்போது மெக்சிகோ மீது தாக்குதலுக்கு அமெரிக்க இராணுவம் தயாராவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கிளாடியா ஷீன்பாம் உறுதி
ட்ரம்ப் மற்றும் அவரது நெருக்கமான வட்டாரங்கள் அவரது தேர்தல் பிரச்சாரத்திலிருந்து மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் குழுக்களை ஆக்கிரமிக்க அல்லது தாக்கும் யோசனையுடன் திட்டமிட்டு வந்துள்ளனர்.
மத்திய அமெரிக்காவில் செயல்படும் போதைப்பொருள் குழுக்களால் வருடத்திற்கு 250,000 முதல் 300,000 அமெரிக்கர்கள் வரை மரணமடைவதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
--- Getty
மதுரோ கைது செய்யப்பட்ட உடனேயே, மெக்சிகோ இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ட்ரம்ப் முன்பு எச்சரித்தார்.
மெக்சிகோவில் அமெரிக்க இராணுவத் தலையீடு குறித்த யோசனை ட்ரம்புடனான தனது உரையாடல்களில் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டதை ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், அப்படியான ஒரு நடவடிக்கையை தாம் நிராகரித்துள்ளதாகவும் ஷின்பாம் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |