நாட்டின் முக்கிய பொறுப்பு ஒன்றில் இந்திய வம்சாவளியை நியமனம் செய்த ட்ரம்ப்.., யார் அவர்?
தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) அடுத்த இயக்குநராக இந்திய வம்சாவளியை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார்.
யார் அவர்?
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற மருத்துவரும், பொருளாதார நிபுணருமான ஜெய் பட்டாச்சார்யாவை (Jay Bhattacharya) நாட்டின் தலைசிறந்த சுகாதார ஆராய்ச்சி மற்றும் நிதியளிப்பு நிறுவனமான தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) அடுத்த இயக்குநராக நியமனம் செய்துள்ளார்.
1968 -ம் ஆண்டில் பிறந்த ஜெய் பட்டாச்சார்யா இந்திய மாநிலமான கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 1997 -ம் ஆண்டில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்தார்.
2000 -ம் ஆண்டில் ஸ்டான்ஃபோர்டில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தற்போது இவர், ஸ்டாண்ட்ஃபோர்டின் மக்கள்தொகை, பொருளாதாரம், உடல்நலம் மற்றும் முதுமைக்கான மையத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
மேலும், தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தின் ஆராய்ச்சி கூட்டாளராகவும் உள்ளார். இவர், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் இதுவரை 135 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, சமீபத்தில் கோவிட்-19 தொற்றுநோயியல் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொரோனா வைரஸ் தொடர்பான பணி நிறுத்தங்களைத் திரும்ப பெற அழைப்பு விடுத்தது தொடர்பான விடயங்களில் பங்காற்றியுள்ளார்.
டிரம்பின் நியமனம் குறித்து பதிலளித்த ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், "இந்த நியமனத்திற்காக அதிபர் டிரம்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறேன்" என்றார்.
இதுகுறித்து பேசிய பட்டாச்சார்யா, ட்ரம்பின் நியமனம் தனக்கு பெருமையும், பணிவும் அளிப்பதாகக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |