முக்கிய பொறுப்புக்கு மற்றொரு இந்திய வம்சாவளியை நியமித்த டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்காவின் FBI அமைப்பின் இயக்குநராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ்யப் பட்டேலை நியமித்துள்ளார் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்.
அமைச்சரவை
ஜனவரி 20ஆம் திகதி டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள நிலையில், தனது அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் மற்றும் உயர் பதவிகளுக்கான நபர்களை அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் அவர் தற்போது புலனாய்வு அமைப்பான FBIயின் புதிய இயக்குநரை நியமனம் செய்துள்ளார்.
இந்திய வம்சாவளி
பென்டகன் அதிகாரி காஷ்யப் பட்டேல்தான் அந்த பொறுப்புக்கு வர உள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "காஷ்யப் ஒரு சிறந்த வழக்கறிஞர் மற்றும் புலனாய்வு அதிகாரி ஆவார். அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்பதை தனது கொள்கையாக கொண்ட அவர் ஊழலை எதிர்த்தும், நீதியை காக்கவும், அமெரிக்க மக்களை பாதுகாக்கவும் உழைத்து வருகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |