அமெரிக்க உளவுத்துறை தலைவராக துளசி நியமனம்: ரஷ்ய உளவாளி சர்ச்சையில் சிக்கிய இவர் இந்திய வம்சாவளியா?
அமெரிக்காவின் உளவுத்துறை தலைவராக துளசி கபார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவுத்துறை தலைவர்
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் தேசிய உளவுத்துறையின் தலைவராக துளசி கபார்ட் (Tulsi Gabbard) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2022ஆம் ஆண்டு வரை ஜனநாயக கட்சியில் இருந்தவர்.
அதன் பின்னர் குடியரசு கட்சியில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் தற்போது முக்கிய பொறுப்பை துளசி கபார்ட் ஏற்க உள்ளார்.
யார் இந்த துளசி கபார்ட்?
அமெரிக்காவின் Samoaவில் பிறந்த துளசி கபார்ட் , ஹவாயில் தனது குடும்பத்துடன் வளர்ந்தார். தனது 21 வயதில் ஹவாய் சட்டசபைக்கு தெரிவான இவர், ராணுவத்தில் சில காலம் பணியாற்றினார்.
பின்னர் அரசியலுக்கு திரும்பிய இவர், 2013ஆம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். இவரின் பெயரை வைத்து இவர் இந்திய வம்சாவளி என பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால், துளசியின் தாயார் இந்து மதத்திற்கு மாறியதால் தனது பிள்ளைகளுக்கு இந்து பெயர்களை வைத்தார். துளசி கபார்ட் தனது சொந்த (ஜனநாயக கட்சியில் இருந்தபோது) கட்சியையே விமர்சித்தவர் ஆவார்.
2022ஆம் ஆண்டில் உக்ரைனில் அமெரிக்க நிதியுதவியுடன் பயோ ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாகக் கூறியது சர்ச்சையானது.
இதன் காரணமாக பலரும் அப்போது துளசி கபார்ட்டை ரஷ்ய உளவாளி என்று அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |