மாஸ்கோவை தாக்க முடியுமா? ஜெலென்ஸ்கியிடம் கேட்ட டிரம்ப்
மாஸ்கோவைத் தாக்க முடியுமா என வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஜெலென்ஸ்கியிடம் கேள்வி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது ட்ரம்ப் விரக்தியில் இருக்கிறார். இதன் எதிரொலியாக, கடந்த 4ஆம் திகதி உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், ரஷ்யாவின் ஆழமான இலக்குகளைத் தாக்க கீவுக்கு நீண்ட தூர ஆயுதங்களை வழங்க ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார்.
அப்போது "வோலோடிமிர், மாஸ்கோவைத் தாக்க முடியுமா?...செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கையும் தாக்க முடியுமா?" என கேட்டுள்ளார்.
அதற்கு ஜெலென்ஸ்கி, "நிச்சயமாக. நீங்கள் எங்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்தால் எங்களால் முடியும்" என பதிலளித்ததாக தகவல் தெரிவிக்கிறது.
காலக்கெடு
உக்ரைனுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அல்லது 100 சதவீத தடைகளை எதிர்கொள்ள ட்ரம்ப் மாஸ்கோவிற்கு 50 நாள் காலக்கெடுவை வழங்கினார்.
ஆனால், அவர் தனிப்பட்ட முறையில் மாஸ்கோ அல்லது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் வரை ரஷ்ய பிரதேசத்தில் ஆழமாக தாக்குதல்களை முடுக்கிவிட உக்ரைனை ஊக்குவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், ட்ரம்ப் தனது ரஷ்யா மீதான புதிய விரக்தியை வெளிப்படுத்தியதுடன், கூட்டணி உறுப்பினர்களால் வழங்கப்படும் புதிய இராணுவ உதவியை கீவிற்கு வழங்க வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்புடன் (நேட்டோ) ஒரு ஏற்பாட்டையும் செய்தார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |