அபுதாபியில் ஒரு ட்ரில்லியன் ஒப்பந்தத்தை அறிவித்து அவசரமாக கிளம்பிய ட்ரம்ப்! என்ன காரணம்?
மத்திய கிழக்கு பயணத்தின் கடைசி நாளில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஒரு ட்ரில்லியன் டொலர் ஒப்பந்தத்தை அறிவித்தார்.
1 ட்ரில்லியன் ஒப்பந்தம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் மேற்கொண்டார்.
அப்போது அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் கத்தார் ஏர்வேஸ் 160 விமானங்களுக்கு ஓர்டர் கொடுத்தது.
ட்ரம்பின் இந்த பயணத்தின் கடைசி நாளில், இறுதியாக 1 ட்ரில்லியன் ஒப்பந்தத்தை அறிவித்தார். அபுதாபியில் நடந்த வணிக வட்டமேசை மாநாட்டில் இதனை அறிவித்த உடனே, அவர் தன் மகளுக்கு பிறந்த குழந்தையைப் பார்க்க செல்வதாக கூறினார்.
வியாழக்கிழமை ட்ரம்பின் மகள் டிஃப்பனிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது ட்ரம்பின் 11வது பேரப்பிள்ளை ஆகும்.
மகத்தான நேரம்
தனது பேரனைப் பார்க்க உடனே கிளம்புவதாக கூறிய ட்ரம்ப், "இது ஒரு மகத்தான நேரம். இப்போது வீடு திரும்ப வேண்டிய நேரம் இது. என் மகளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. நான் வீடு திரும்பி அந்த சிறிய குழந்தையைப் பார்க்கப் போகிறேன்.
பின்னர் நாம் நிறைய வேலைகளுக்குத் திரும்புவோம். ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நான் நேற்று கிளம்பியிருக்க வேண்டும். ஆனால் நான் உங்களை ஏமாற்ற முடியாது" என பட்டத்து இளவரசர் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானிடம் கூறினார்.
இந்த அறிவிப்பின் மூலம், ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக துருக்கிக்கு செல்லப்போவதில்லை என்றும் ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.
அத்துடன் தானும் புடினும் சந்திக்கும் வரை ஒரு ஒப்பந்தம் முடிவடையும் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |