ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானால்... எதிர்கொள்ளத் தயாராகும் ஜேர்மனி
ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் இடையே நல்ல உறவு நிலவுகிறது.
ஆனால், அடுத்து ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகலாம் என்ற கருத்து நிலவுவதால், ட்ரம்பை எதிர்கொள்ள ஜேர்மனி தயாராகிவருகிறது.
காரணம் என்ன?
விடயம் என்னவென்றால், ட்ரம்புக்கும் ஜேர்மனிக்கும் இடையில் சரியான உறவு இல்லை. ஆகவே, அவர் அமெரிக்க ஜனாதிபதியானால், இரு நாடுகளுக்குமிடையிலான உறவு எப்படி இருக்குமோ என ஜேர்மன் அரசியல்வாதிகள் கவலைப்படுகிறார்கள்.
முன்பு ட்ரம்ப் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, ஹிலாரிதான் ஜெயிப்பார் என்ற நம்பிக்கையில் சில ஜேர்மன் அரசியல்வாதிகள் அவரை மோசமாக விமர்சித்தார்கள்.
ஆனால், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியானார்.
ஆக, இம்முறையும் அவர் ஜனாதிபதியானால், அதை எதிர்கொள்ள, அதாவது ட்ரம்புடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என ஜேர்மன் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |