ஆப்கானிஸ்தானின் இந்த மோசமான நிலைக்கு அமெரிக்கா தான் காரணம்! டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தானை தலிப்பான்கள் வேகமாக கைப்பற்றி வருவதற்கு அதிபர் பிடன் தான் முக்கிய காரணம் என்ற கண்ணோட்டத்தில் டிரம்ப் விமர்சித்து வருகிறார்.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிடமிருந்து வாபஸ் பெற்ற உடனே முக்கிய நகரங்களை தலிப்பான்கள் வேகமாக கைப்பற்றி வருகிறது. இதன் மூலம் மொத்தம் உள்ள 34 மாகாண தலைநகரங்களில் 12 தலைநகரங்கள் தலிபான்கள் வசம் சென்றுள்ளன.
இப்படியே சென்றால் இன்னும் 3 மாதங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள மொத்த நகரங்களையும் தலிபான்கள் கைப்பற்றினாலும் ஆச்சரியம் இல்லை.
தலிபான்களின் இந்த வெற்றிக்கு அமெரிக்கா தான் காரணம் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் பிடன் அமெரிக்கா படைகளை வாபஸ் பெற்று பெரிய தவறு செய்துவிட்டார். அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானிடமிருந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி தான் வாபஸ் பெற வேண்டும்.
ஆனால் முன்பாகவே வாபஸ் பெற என்ன காரணம்? நான் பதவியில் இருந்திருந்தால் இப்படி நடக்கவிட்டு இருக்க மாட்டேன். நிபந்தனைகள் இல்லாமல் அவர்களிடம் இருந்து மொத்தமாக படைகளை வாபஸ் பெற்றிருக்க மாட்டேன்.
ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு அதிபர் பிடன் தான் முக்கிய காரணம் மற்றும் படைகள் வாபஸ் வாங்கிய முறை சரியில்லை என்று தெரிவித்துள்ளார்.