மன்னர் சார்லசின் அமெரிக்கப் பயணம்: உடனடியாக மரபை மீறிய ட்ரம்ப்
மன்னர் சார்லஸ் தன் மனைவியான ராணி கமீலாவுடன் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில், மன்னர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்த சிறிது நேரத்திலேயே அவர் ராஜ மரபை மீறியதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மரபை மீறிய ட்ரம்ப் மன்னர் சார்லசும் ராணி கமீலாவும்
நேற்று அமெரிக்கா சென்றடைந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அவரது மனைவியான மெலானியாவும் அவர்களை வரவேற்றனர்.

ட்ரம்ப் மன்னரை கைகுலுக்கி வரவேற்க, மெலானியா கமீலாவை இரு கன்னங்களிலும் முத்தமிட்டு வரவேற்க, நான்கு பேரும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
புகைப்படங்கள் எடுத்து முடிந்து விருந்துக்காக நான்குபேரும் வெள்ளை மாளிகையின் பிரதான இல்லத்துக்குப் புறப்படுவதற்காக திரும்ப, ட்ரம்ப் மன்னரின் தோளைத் தட்டியுள்ளார்.

ராஜ மரபுப்படி யாரும் மன்னர் மீது முதலில் கைவைக்கக்கூடாது. ஆக, ட்ரம்ப் மன்னரைத் திட்டவிடயம் மரபு மீறலாகும்.
விடயம் என்னவென்றால், மன்னர் அதை சட்டை செய்ததாகவே தெரியவில்லை.
இன்னொரு விடயம், இப்படி ட்ரம்ப் ராஜ மரபை மீறுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2018ஆம் ஆண்டு ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணமாக வந்தபோது, அவரை வரவேற்க வீரர்கள் அணிவகுத்து நிற்க, மகாராணியாருக்கு முன் ட்ரம்ப் நடக்கத் துவங்கினார்.
அதேபோல, கடந்த ஆண்டு ட்ரம்ப் லண்டன் வந்தபோதும், மன்னரின் கைகளை அவர் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |