அமெரிக்க தேர்தல்களில் சீர்திருத்தம் செய்ய திட்டம்: டிரம்ப் கையில் எடுத்துள்ள அடுத்த விவகாரம்
அமெரிக்க தேர்தல் முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
வரிவிதிப்பு கொள்கைகள்
அமெரிக்க ஜனாதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பை அறிமுகப்படுத்தினார்.
அத்துடன் உலக நாடுகளுக்கு இடையே ஏற்பட்டு வரும் மோதல்களில் தலையீட்டு அவற்றுக்குத் தீர்வு காணும் முயற்சிப்பதோடு உலகின் பரபரப்பான நிகழ்வுகளில் தன்னையும் இணைத்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தன்னுடைய அடுத்த நடவடிக்கையாக அமெரிக்க தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

டிரம்பின் தேர்தல் சீர்திருத்த திட்டம்
இது தொடர்பாக டிரம்ப் தெரிவித்த தகவலில், அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலின் போது வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும், வாக்குகள் திருடப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
அத்துடன் இந்த குறைபாடுகளை நாம் சரி செய்ய போகிறோம் என்றும், தேர்தலில் சீர்திருத்தங்கள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் முன்மொழிவுகள்
அமெரிக்க தேர்தலில் வாக்களிப்பவர்கள் அனைவரும் தங்களது குடியுரிமை ஆதாரத்தை காட்ட வேண்டும்.
மெயிலில் இனி வாக்கு சீட்டுகள் வழங்கப்படாது. குறிப்பிட்ட நோயாளிகள் மற்றும் இராணுவத்தினர் மட்டுமே வாக்குச்சீட்டு முறையில் ஓட்டளிக்க முடியும்.
மற்ற அனைவரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும், இந்த நடைமுறையை அனைத்து குடியரசு கட்சியினரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |