ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்: Nvidia-விற்கு டிரம்ப் வலியுறுத்தல்
Trump Calls for Nvidia to Reinstate Jensen Huang: ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பணியில் அமர்த்த என்விடியா நிறுவனத்திற்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பணியில் அமர்த்த டிரம்ப் வலியுறுத்தல்
சீன உளவாளி பெண் ஒருவருடனான தனிப்பட்ட உறவுகள் தொடர்பாக வெடித்த சர்ச்சை தொடர்ந்து சமீபத்தில் என்விடியா நிறுவனத்தின்(Nvidia) CEO பதவியில் இருந்து ஜென்சன் ஹுவாங் விலகினார்.
இதையடுத்து ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று Nvidia நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.

ஜென்சன் ஹுவாங்கும், நிறுவனத்தின் நலன் கருதி என்விடியா நிறுவனத்தை மீண்டும் வழிநடத்த தயாராக இருப்பதாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் CEO-வாக என்விடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பணியில் அமர்த்தும் என்று தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பணியில் அமர்த்துவது என்பது தொழில்நுட்ப நிறுவனத்திற்கும், அமெரிக்க நாட்டிற்கும் நன்மை பயக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 12-ஆம் தேதி ஹுவாங் பதவி விலகுவதற்கு முன்பும், பின்பும் டிரம்ப் அவருக்குத் தொடர்ந்து ஆதரவாகக் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் தொடர்ந்து ஆதரவு கருத்து தெரிவித்து வந்தாலும், என்விடியா நிறுவனம் ஹுவாங் இல்லாமல் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதில் உறுதியாக உள்ளது.