ஈரான் போரில் தன்னைக் காப்பாற்ற பெரும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களிடம் கெஞ்சும் ட்ரம்ப்

Donald Trump Israel-Iran conflict
By Arbin Mar 07, 2026 12:01 AM GMT
Report

ஈரானுக்கு எதிரான போரில் போதுமான ஆயுதங்களை விநியோகிக்க முடியாமல் பென்டகன் அதிகாரிகள் தடுமாறிவரும் நிலையில், பெரும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களிடம் ஜனாதிபதி ட்ரம்ப் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆயுதம் வழங்க

ஈரானில் ஒரு வாரத்திற்கு முன்பு போர் தொடங்கியதிலிருந்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் தாக்குதல் மற்றும் தற்காப்புப் பணிகளில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளைப் பயன்படுத்தி, 2,000 க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளன.

ஈரான் போரில் தன்னைக் காப்பாற்ற பெரும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களிடம் கெஞ்சும் ட்ரம்ப் | Trump Calls Weapons Production

ஈரான் மீது Tomahawk குரூஸ் ஏவுகணைகள் மழையாக பொழிந்த நிலையில், பதிலடியாக ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஷாஹெத் ட்ரோன்கள் அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகள் மீது பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

போர் தற்போது இரண்டாவது வாரத்திற்குள் நுழையும் நிலையில், அமெரிக்காவால் இந்தப் பிராந்தியத்தில் தனது நட்பு நாடுகளுக்கு ஆயுதம் வழங்க முடியுமா மற்றும் ஈரானிய தொடர்ச்சியான எதிர்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பை வழங்க முடியுமா என்பது குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.

அமெரிக்கா முன்னெடுத்துள்ள போருக்கு போதுமான ஆயுதங்களை வழங்க முடியாமல் பென்டகன் அதிகாரிகள் திணறுவதாக ஏற்கனவே தகவல் கசிந்துள்ளது.

இன்னும் சில தினங்களில்... கத்தாரின் எச்சரிக்கையால் உச்சம் தொட்ட எண்ணெய் விலை

இன்னும் சில தினங்களில்... கத்தாரின் எச்சரிக்கையால் உச்சம் தொட்ட எண்ணெய் விலை

அமெரிக்கா ஈரான் முழுவதும் ஆயிரக்கணக்கான இலக்குகளைத் தாக்கியுள்ளது, மேலும் இஸ்ரேலுடன் இணைந்து, ஆயத்துல்லா அலி காமெனி உட்பட நாட்டின் உயர்மட்டத் தலைவர்களில் பெரும்பாலோரைக் கொன்றது.

ஆனால் ஆபரேஷன் எபிக் ப்யூரி ஏற்கனவே அமெரிக்காவின் ஏவுகணை இருப்பை காலி செய்துவிட்டது என்றே தகவல் கசிந்துள்ளது.

இந்த நிலையில், வளைகுடா நாடுகளுக்கும் உக்ரைனுக்கும் பல முனைகளில் தங்களைத் தற்காத்துக் கொள்ள போதுமான ஏவுகணைகள் அமெரிக்காவிடம் இல்லை என ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆணையர் Andrius Kubilius எச்சரித்துள்ளார்.

நான்கு மடங்காக

இதனிடையே, அமெரிக்காவால் ஒரு போரை நீண்ட காலத்திற்கு நீட்டிக்க முடியும் என்ற உறுதிமொழிகளை ட்ரம்ப் அளித்த போதிலும், நிலைமையை அவர் நன்கு அறிந்திருப்பதாகத் தெரிகிறது.

வெள்ளிக்கிழமை Lockheed Martin, Northrop Grumman, RTX, Honeywell, and L3Harris Technologies ஆகிய பெரும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விவாதித்துள்ளார்.

ஈரான் போரில் தன்னைக் காப்பாற்ற பெரும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களிடம் கெஞ்சும் ட்ரம்ப் | Trump Calls Weapons Production

அவர்கள் ஏவுகணை உற்பத்தியை அதிகரிப்பதாக உறுதி அளித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் அனைத்தும் உற்பத்தியை நான்கு மடங்காக அதிகரிக்க ஒப்புக்கொண்டதாகவே ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், போருக்கான ஆயுதங்களை வாங்க நாடாளுமன்றத்தில் கூடுதல் நிதியைக் கோருவதையும் ட்ரம்ப் பரிசீலிக்க இருக்கிறார். 50 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு கிடைத்தால் உற்பத்தி உடனடியாகத் தொடங்கலாம் என்றும் அந்த நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US