இந்த மாணவர்களுக்கான விசா இனி ரத்தாகும்... வெளியேற்றவும் முடிவு: ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி

Donald Trump Palestine Israel-Hamas War
By Arbin Jan 30, 2025 03:21 AM GMT
Report

அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் ஈடுபட்ட சர்வதேச கல்லூரி மாணவர்கள் மற்றும் தொடர்புடையவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் நிர்வாக உத்தரவுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

உடனடியாக அமுலுக்கும்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் யூத எதிர்ப்புக்கு எதிரான நிர்வாக உத்தரவில் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளார். இதனால் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்ற குடியுரிமை பெறாத கல்லூரி மாணவர்கள் மற்றும் பிறர் நாடு கடத்தப்படும் சிக்கலில் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்களுக்கான விசா இனி ரத்தாகும்... வெளியேற்றவும் முடிவு: ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி | Trump Cancel Student Visas Pro Palestinian

மட்டுமின்றி, இந்த நிர்வாக உத்தரவானது உடனடியாக அமுலுக்கும் வந்துள்ளது. ட்ரம்பின் நிர்வாக உத்தரவில், பயங்கரவாத ஆதரவு போராட்டங்களில் இணைந்த அனைத்து வெளிநாட்டினருக்கும், நாங்கள் உங்களைக் கண்டுபிடிப்போம், உங்களை நாடு கடத்துவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகங்களில் உள்ள அனைத்து பாலஸ்தீன ஆதரவு மாணவர் விசாக்களையும் விரைவில் ரத்து செய்வேன் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஒரேயொரு காரணம்... 2099 ஆம் ஆண்டுக்குள்: நடுங்க வைக்கும் புதிய ஆய்வறிக்கை

ஒரேயொரு காரணம்... 2099 ஆம் ஆண்டுக்குள்: நடுங்க வைக்கும் புதிய ஆய்வறிக்கை

ஆனால், இந்த புதிய நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்தின் பேச்சு சுதந்திரத்தை மீறும் செயல் என்றும், சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் உரிமைக் குழுக்கள் மற்றும் சட்ட அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவர்களுக்கான விசா இனி ரத்தாகும்... வெளியேற்றவும் முடிவு: ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி | Trump Cancel Student Visas Pro Palestinian

இதனிடையே, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், முதல் சட்ட திருத்தமானது அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு குடிமக்கள் உட்பட அமெரிக்காவில் உள்ள அனைவரையும் பாதுகாக்கிறது.

மேலும், அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் குடிமக்கள் அல்லாதவர்களை நாடு கடத்துவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

60 நாட்களுக்குள்

இந்த நிலையில், ட்ரம்ப் இந்த உத்தரவை அமுல்படுத்த முயன்றால், நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்துப் போராடுவது குறித்து பரிசீலிப்போம் என்று மிகப்பெரிய இஸ்லாமிய சட்டத்தரணிகள் குழுவான அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்த மாணவர்களுக்கான விசா இனி ரத்தாகும்... வெளியேற்றவும் முடிவு: ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி | Trump Cancel Student Visas Pro Palestinian

ஹமாஸ் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடும் அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் அறிவித்த போர் பிரகடனமும் அமெரிக்க கல்லூரி வளாகங்களை உலுக்கும் அளவுக்கு பல மாதங்களாக பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடந்தன.

அத்துடன், யூதர்கள், முஸ்லிம்கள், அரேபியர்கள் மற்றும் மத்திய கிழக்கு வம்சாவளியைச் சேர்ந்த பிற மக்கள் மீது வெறுப்பு குற்றங்கள் உட்பட பல சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சிவில் உரிமைகள் குழுக்கள் ஆவணப்படுத்தியுள்ளன.

இந்த மாணவர்களுக்கான விசா இனி ரத்தாகும்... வெளியேற்றவும் முடிவு: ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி | Trump Cancel Student Visas Pro Palestinian

தற்போது ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ள நிர்வாக உத்தரவில், யூத எதிர்ப்புக்கு எதிராகப் போராடப் பயன்படுத்தக்கூடிய அனைத்து குற்றவியல் மற்றும் சிவில் அதிகார வரம்புகள் குறித்த பரிந்துரைகளை 60 நாட்களுக்குள் வெள்ளை மாளிகைக்கு வழங்க ஏஜென்சி மற்றும் துறைத் தலைவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களை முன்னெடுத்துள்ள பலரும், இஸ்ரேலின் கொடூர நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அது ஹமாஸ் ஆதரவு போராட்டங்கள் அல்ல என்றும் அப்போதே விளக்கமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US