மொஜ்தபா கமேனி 90 சதவீதம் போய்விட்டார்., ட்ரம்ப் அதிர்ச்சியூட்டும் கருத்து
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமாகும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் முக்கிய இராணுவத் தலைவர்கள் அழிக்கப்பட்டதாகவும், உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி 90 சதவீதம் போய்விட்டார் (90% gone) என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் கடற்படை, விமானப்படை, எதிர்வான்படை அனைத்தும் அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் Fox News-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

“அவர்களின் சிறந்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கமேனி இல்லை” என அவர் கூறினார்.
மொஜ்தபா கமேனி, தந்தையின் மரணத்திற்குப் பின் ஈரானின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டனர். சமீபத்திய விமானத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்ததால், தந்தையின் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீதான முற்றுகையை (Iranian blockade) அமுல்படுத்தும் என்றும், அந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் பாதுகாப்புக்காக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்தார்.
“ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும். ஈரானின் கப்பல்கள் மட்டும் தடுக்கப்படும். மற்ற நாடுகள் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம்” என Truth Social-ல் பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “ஹார்முஸ் நீரிணையின் காவலர் எப்போதும் ஈரானே. அமெரிக்கா அல்ல” எனக் கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |