ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி

Donald Trump Saudi Arabia Iran
By Arbin Aug 02, 2026 08:35 AM GMT
Report

சனிக்கிழமை இரவு ஈரான் மீது உக்கிரமானத் தாக்குதல் முன்னெடுக்க இருப்பதாக அமெரிக்கா கூறி வந்த நிலையில், திடீரென்று அந்த முடிவை ஜனாதிபதி ட்ரம்ப் மாற்றியுள்ளார்.

ட்ரம்பின் முடிவில் மாற்றம்

ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவுக்குப் பின்னால் சவுதி அரேபியாவின் தலையீடும் அண்டை நாடுகள் மீது ஈரான் விடுத்த மிரட்டலும் காரணமாகக் கூறப்படுகிறது.

ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி | Trump Climbs Down Iran Strikes

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ட்ரம்ப்பின் தாக்குதல் திட்டங்கள் குறித்து தமது கருத்தைத் தெரிவிப்பதற்காக சனிக்கிழமையன்று அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகத் தகவல் வெளியானது.

மேலும், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் தங்கள் அண்டை நாடுகளுக்கு எதிராகத் தீர்க்கமான முறையில் பதிலடி கொடுப்போம் என்று ஈரான் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்தே ட்ரம்பின் முடிவில் மாற்றம் ஏற்பட்டது என்றும் கூறுகின்றனர்.

சனிக்கிழமையன்று ஈரான் ட்ரோன்களால் தாக்குதலுக்கு உள்ளானதாக குவைத் தெரிவித்தது; அதேவேளையில், ஹார்முஸ் நீரிணையில் ஓமன் அருகே இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டன.

இஸ்ரேலுடன் இணைந்து... ஈரான் தாக்குதல் தொடர்பில் அதிரடியான முடிவெடுத்த ட்ரம்ப்

இஸ்ரேலுடன் இணைந்து... ஈரான் தாக்குதல் தொடர்பில் அதிரடியான முடிவெடுத்த ட்ரம்ப்

Axios செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், பதற்றத்தைத் தணிக்குமாறும், தாக்குதல்களைத் தவிர்க்குமாறும் சவுதி பட்டத்து இளவரசர் ட்ரம்பை வலியுறுத்தியிருந்தார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

Associated Press செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்கா ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைத்தாலோ அல்லது பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீது பெரும் தாக்குதல்களை நடத்தினாலோ,

அதற்குப் பதிலடியாக ஈரான் சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகள் மீது இதேபோன்ற தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் கவலை தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி | Trump Climbs Down Iran Strikes

அத்துடன், சனிக்கிழமை நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது, ​​ஈரானுக்கு எதிராக என்ன புதிய சாத்தியமான நடவடிக்கையை எடுப்பது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருகிறார் என்பது பற்றியும் பட்டத்து இளவரசர் தெளிவுபடுத்தக் கோரியுள்ளார்.

ஈராக்கில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் பயன்படுத்திய தளவாட மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீதான தாக்குதலில், அமெரிக்காவுடன் இணைந்து சவுதி அரேபியாவும் இந்த வாரத் தொடக்கத்தில் பங்கேற்றது; இருப்பினும், அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றே சவுதி வலியுறுத்தி வருகிறது.

ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி | Trump Climbs Down Iran Strikes

முன்னதாக CBS செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த தகவலில், ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை இலக்காகக் கொண்டு, வார இறுதி முழுவதும் அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளது.

கத்தார் மற்றும் இஸ்ரேலின்

இந்த நிலையிலேயே, அமெரிக்காவின் எவ்வித சாகச நடவடிக்கைகளுக்கும் எதிராக ஈரான் எச்சரிக்கை விடுத்ததுடன், அதற்குத் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியது.

இதனிடையே, பல முக்கிய தளங்கள் மீது ஈரான் ஏவிய ட்ரோன்களை அழித்ததாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவின் மூத்த அதிகாரிகளுடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனித்தனி தொலைபேசி உரையாடல்களில் தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கும் அல்லது அத்தகைய நடவடிக்கைகளில் பிராந்திய நாடுகள் பங்கேற்பதற்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் அராக்சி தனது பிராந்திய சகாக்களிடம் தெரிவித்திருந்தார்.

ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி | Trump Climbs Down Iran Strikes

இதனிடையே, ஈரானின் Nournews செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த தகவலில், ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான அமெரிக்கத் தாக்குதல்கள், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் வயல்கள் மீதும்,

கத்தார் மற்றும் இஸ்ரேலின் எரிவாயு வயல்கள் மீதும் ஈரான் தாக்குதல்களைத் தொடுக்கத் தூண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுகளே ஈரானுக்கு எதிரான உக்கிரத் தாக்குதல் முடிவில் இருந்து ட்ரம்பை பின்வாங்க வைத்ததாகத் தெரிகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US