பில்லியன் டொலர்களை இழந்த அமெரிக்கா - நெதன்யாகுவை கெட்ட வார்த்தையில் டிரம்ப்?
ஈரான் - அமெரிக்கா போர் குறித்து முன்னாள் ஐநா அதிகாரி கண்ணன் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் போர்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், அமைதி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனிடையே அமெரிக்க வான்படை ஈரானின் படகுகள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

ஈரான் போரில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானத்துக்கு எதிராக 208 பேர் வாக்களித்தனர். ஆதரவாக டிரம்ப்பின் குடியரசு கட்சியை கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்கள் உட்பட 215 உறுப்பினர்கள் வாக்களித்ததால் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேறியுள்ளது.
இந்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் சூழல் குறித்து முன்னாள் ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரியான கண்ணன் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
போருக்கு எதிராக தீர்மானம்
அமெரிக்க காங்கிரஸில் போருக்கு எதிரான தீர்மானம் குறித்து பேசிய அவர், தற்போது பிரதிநிதிகள் அவையில் மட்டுமே தீர்மானம் நிறைவேறியுள்ளது. இன்னும் செனட் அவையில் தீர்மானம் நிறைவேற வேண்டும்.
அப்படி இரு அவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் கூட டிரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரிக்க முடியும்.
இதனால் டிரம்ப்பிற்கு இது ஒரு பின்னடைவு கிடையாது. ஆனால், அவரின் குடியரசு கட்சியை சேர்ந்த 4 பிரதிநிதிகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பது அவர்கள் பொறுமையிழந்து வருவதை காட்டுகிறது.
போருக்காக இதுவரை அமெரிக்கா சுமார் 1 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளது. ஈரானின் தொழிற்சாலைகள், ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளது. மக்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். ஈரானின் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுளளது. இதனால் இந்த போர் நிறுத்த வேண்டிய நிர்பந்தம் இரு நாடுகளுக்கும் உள்ளது.
லெபனானில் தாக்குதலை நிறுத்த கோரி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் டிரம்ப் பேசியுள்ளார். இதில், நெதன்யாகுவை பைத்தியம் என்று கூறியதோடு, கெட்ட வார்த்தைகளில் திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நான் இல்லாவிட்டால் நீ சிறை சென்றிருப்பாய் என கூறியுள்ளார். பைத்தியம் என திட்டியதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்" என கூறியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |