ஹார்மோஸ் நீரிணையை கைவிட்ட ட்ரம்ப் - முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்?
ஹார்மோஸ் நீரிணை பாதுகாப்பை அந்த பயன்படுத்தும் நாடுகளே பார்த்துக்கொள்ள வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க போர்
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.

போர் தொடங்கி 3 வாரம் ஆன நிலையில், முதல் 2 வாரத்திலே 1 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாயை அமெரிக்கா செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், போருக்காக 200 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.18 லட்சம் கோடி) நிதி தேவை என வெள்ளை மாளிகையை பென்டகன் அணுகி உள்ளது.
இந்நிலையில், இந்த போர் நமக்கு தேவையில்லாதது என அமெரிக்கா மக்கள் பலரும் ட்ரம்ப்பிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நோக்கங்கள்
இது குறித்து அவர் தனது Truth Social பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஈரானின் பயங்கரவாத ஆட்சி தொடர்பாக மத்திய கிழக்கில் நமது இராணுவ முயற்சிகளை படிப்படியாகக் குறைத்துக்கொள்ளும் நிலையில், நமது நோக்கங்களை அடைவதற்கு நாம் மிகவும் நெருங்கிவிட்டோம்.
ஈரானின் ஏவுகணைத் திறன், ஏவுதளங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அனைத்தையும் முற்றிலுமாகச் செயலிழக்கச் செய்தல். ஈரானின் பாதுகாப்புத் தொழில் தளத்தை அழித்தல்.
விமான எதிர்ப்பு ஆயுதங்கள் உட்பட, ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை ஒழித்தல்.
ஈரான் அணுசக்தித் திறனை நெருங்கக்கூட ஒருபோதும் அனுமதிக்காமல், அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால், அமெரிக்கா விரைவாகவும் சக்திமிக்கதாகவும் பதிலடி கொடுக்கக்கூடிய நிலையில் எப்போதும் இருத்தல்.
இஸ்ரேல், சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளுக்கு உச்ச பாதுகாப்பு உறுதி செய்தல்.
ஹோர்முஸ் நீரிணை
இதே போல் ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் நாடுகளே, தேவைக்கேற்ப அதை பாதுக்கவும், கண்காணிக்கவும் வேண்டும், அமெரிக்கா அதைப் பயன்படுத்துவதில்லை!

இது தொடர்பான முயற்சியில் உதவி கேட்கப்பட்டால் மட்டும் அமெரிக்கா உதவி வழங்கும். ஆனால் ஈரானின் அச்சுறுத்தல் ஒழிக்கப்பட்டவுடன் அது அவசியமாக இருக்காது" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் பிற நாடுகளும் ஹோர்முஸ் நீரிணையை திறக்கும் முயற்சிக்கு போர் கப்பல்களை அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஆனால் ட்ரம்ப்பின் கோரிக்கையை எந்த நாடுகளும் ஏற்காத நிலையில், நேட்டோ உள்ளிட்ட நட்பு நாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |