பதவி விலகியதும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிறைக்கு செல்லலாம்... காத்திருக்கும் 10 குற்றச்சாட்டுகள்!
Donald Trump
Could be jailed
Crarges on him
By Balakumar
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவி விலகியதும், அவரை சிறைக்கு அனுப்ப 10 குற்றச்சாட்டுகள் தயாராக உள்ளன!
- 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் நீதித்துறை அதிகாரிகள் பணிசெய்ய தடையாக இருந்ததாக ட்ரம்ப் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
- தனது பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் தனது தோல்வியை மாற்றி அறிவிக்க அதிகாரிகளை தூண்டியது மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைநகரில் ஏற்படுத்திய குழப்பத்தில் ஐந்து பேர் பலியானதாக ஒரு குற்றச்சாட்டு.
- ஆபாசப்பட நடிகையான Stormy Danielsஉடனான தவறான உறவு குறித்து வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக அவருக்கு 95,000 பவுண்டுகள் கொடுக்கப்பட்டதாக ஒரு வழக்கு.
- ட்ரம்ப் மீது 30க்கும் அதிகமான பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
- கடன் பெறும் மற்றும் வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் ட்ரம்பின் குடும்ப ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று போலியான சொத்து தொடர்பான தகவல்களை அளித்ததாக ஒரு குற்றச்சாட்டு.
- அதிகாரத்தை சுய லாபத்துக்காக பயன்படுத்தியதாக ட்ரம்ப் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
- ட்ரம்ப் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் மீது மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று தொடர்பில் 2018ஆம் ஆண்டு மோசடி வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
- ட்ரம்ப் மீது அவரது உறவினரான Mary Trump என்பவர் மோசடி வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்.
- ட்ரம்பின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்ற Summer Zervos என்ற இளம்பெண் தன்னை ட்ரம்ப் பாலியல் ரீதியில் தன் அனுமதியின்றி தவறாக தொட்டதாக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தன் மீது எதிர்காலத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக, தனக்குத்தானே மன்னிப்புக் கொடுக்க முயல்கிறார் ட்ரம்ப்.
ஆனால், அப்படி அவர் மன்னிப்புக் கொடுக்க முயல்வதே, அவர் மீது தவறு இருப்பதை உறுதி செய்வதால், பல வழக்குகள் அவர் மீது தொடரப்பட வாய்ப்பு உள்ளது.
ஆக, எப்படியும் ட்ரம்ப் தன் அதிபர் பதவியிலிருந்து விலகியதும் சிறைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US