இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்: மத்திய கிழக்கிற்கு செல்லும் டிரம்ப்
காசா போர் நிறுத்தம் தொடர்பாக மத்திய கிழக்கிற்கு செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமிக்ஞை செய்துள்ளார்.
நெருங்கும் போர் நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 2 வது ஆண்டை கடந்துள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னெடுப்பில் நடைபெற்று வரும் போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை மிகவும் நெருங்கி வருவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்பந்தம் மிகவும் நெருங்கி வருவதாகவும், பேச்சுவார்த்தைகளில் நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த பேச்சுவார்த்தையில், ஹமாஸ் குழுவினர், சர்வதேச நாடுகளின் கூட்டணி உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட குழுவினர் ஆகியோர் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
மத்திய கிழக்கிற்கு செல்லும் டிரம்ப்
அத்துடன் அமைதிக்கான இறுதி முயற்சியை ஆதரிக்கும் பொருட்டு, “இந்த வார இறுதிக்குள் அல்லது ஞாயிற்றுக்கிழமை மத்திய கிழக்கிற்கு பயணம் மேற்கொள்ளலாம், பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இருப்பதால் இதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்று வரும் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் முஸ்லிம், அரபு நாடுகள் உட்பட பல சர்வதேச நாடுகள் பங்கேற்று இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிணைக் கைதிகள் விடுவிப்பு மற்றும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருதல் ஆகியவை போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |