ஐரோப்பாவின் குடியேற்ற கொள்கை தவறானது: டிரம்ப் கடுமையான விமர்சனம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஐரோப்பாவின் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐரோப்பாவின் குடியேற்ற கொள்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக வலைதள பக்கமான ட்ரூத் சோஷியல் தெரிவித்த கருத்தில், ஐரோப்பாவின் குடியேற்ற கொள்கை மிகவும் தாராளமாக இருப்பதாக கூறி தன்னுடைய கடுமையான விமர்சனங்களை சனிக்கிழமை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த தாராளமான கொள்கை மிகவும் தீவிரமானது மற்றும் விரைவானது என டிரம்ப் வாதிட்டார்.
மேலும் தன்னுடைய பதிவில், மூன்றாம் உலக நாடுகளின் குற்றவாளிகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் நாடும் மூன்றாம் உலக நாடாக மாறிவிடும் என்பதை ஐரோப்பிய நாடுகள் தற்போது உணர்ந்து வருவதாக சுட்டிக் காட்டினார்.

அத்துடன் இந்த மாற்றமானது மிகவும் சிறிய கால இடைவெளியில் நிகழ்ந்து விடும் என்றும் எச்சரித்துள்ளார்.
அந்த பதிவில் அவருடைய கருத்தை முடிக்கும் போது, தன்னுடைய அரசியல் வருகை என்பது சரியான நேரத்தில் நிகழ்ந்த ஒன்று, நான் சரியான நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று டிரம்ப் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |