கெடு விதித்துள்ள ட்ரம்ப்... ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா? நிபுணர்கள் கருத்து
ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ள ட்ரம்ப், அதற்கு காலக்கெடுவும் விதித்துள்ளார்.
ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடு முடிவடைய இன்னும் சிறிது நேரமே இருக்கும் நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா? அதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
நிபுணர்கள் கருத்து
இந்நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்பட என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
1. ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம்
ஹோர்முஸ் ஜலசந்தி விரைவாக திறக்கப்பட வேண்டுமானால், அதற்கான சிறந்த வழிமுறை, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்வதாகும்.
விடயம் என்னவென்றால், அப்படி ஒப்பந்தத்தின்படி ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை திறந்தாலும், ஜலசந்தி அதன் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கும்.

அப்போது, அவ்வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் வரி விதிக்கலாம். அதனாலும் எரிபொருள் விலை உயர வாய்ப்புள்ளது.
2. அமெரிக்கா தலைமையில் ராணுவ நடவடிக்கை
அமெரிக்கா நேரடியாக தலையிட்டு ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்கலாம். அப்படி செய்யும் பட்சத்தில், அமெரிக்க கடற்படை கண்ணிவெடிகளை அகற்றுதல், எண்ணெய்க் கப்பல்களுக்கு பாதுகாப்பளித்தல் முதலான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியிருக்கும்.
3. ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீடு
ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க மூன்றாவது வழிமுறை, தூதரக வாயிலாக ஐக்கிய நாடுகள் அமைப்பு ஜலசந்தியை திறக்கும் விடயத்தில் தலையிடுவதாகும்.
அத்துடன், ஜலசந்தி திறக்கப்பட்டபின், எதிர்காலத்தில் கப்பல் போக்குவரத்துக்கு பாதுகாப்பளிக்க, பல நாடுகளின் கடற்படைகள் இணைந்து செயல்படலாம்.
ஆக, ட்ரம்ப் விதித்த காலக்கெடு விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது, ஒப்பந்தமா அல்லது ஈரான் அமெரிக்கப் போர் அடுத்த கட்டத்துக்குச் செல்லுமா என்பதை அறிய உலகமே காத்திருக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |