ட்ரம்புக்கு பதிலடியாக அமெரிக்கா அருகில் ரஷ்ய நீர்மூழ்கிகள்? பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வீடியோ
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான வார்த்தைப்போர், உலகப்போராக வெடிக்குமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் வார்த்தைப்போர்
இந்தியா மீது 25 சதவிகித வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியாவும் ரஷ்யாவும் தங்கள் ’இறந்த பொருளாதாரங்களை’ ஒன்றாக வீழ்த்த முடியும் என்று கூறிய விடயம் போர்ப்பதற்றம் வரை கொண்டுவந்துள்ளது.
ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியான டிமிட்ரி மெட்வெடேவ் (Dmitry Medvedev), அமெரிக்க ஜனாதிபதி இறுதி எச்சரிக்கை விளையாட்டை விளையாடுகிறார் என்றும் ரஷ்யா ஒரு வலிமையான சக்தி என்பதை டிரம்ப் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.
மேலும், ட்ரம்ப் இறந்த பொருளாதாரங்களைக் குறித்து பேசுகிறார், ’இறந்த கை’ என்னும் ஒரு விடயம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அவர் நினைவில் கொள்ளவேண்டும் என்றும் மெட்வெடேவ் கூறியிருந்தார்.
மெட்வெடேவ் குறிப்பிட்ட இறந்த கை என்பது (Dead Hand) மாஸ்கோவால் வடிவமைக்கப்பட்ட ஒரு பனிப்போர் கால அமைப்பாகும்.
சோவியத் யூனியன் தாக்கப்பட்டால், அதன் தலைமை செயலிழந்திருந்தாலும் கூட, தானாகவே பதிலடி கொடுக்கும் அணுசக்தித் தாக்குதலைத் தொடங்கும் ஒரு அமைப்பே இறந்த கை என அழைக்கப்படுகிறது.
மெட்வெடேவ் இறந்த கை குறித்து பேசியதும் ட்ரம்புக்கு கடும் கோபம் வந்துவிட்டது.
இந்தியாவும் ரஷ்யாவும் தங்கள் இறந்த பொருளாதாரங்களை ஒன்றாக வீழ்த்த முடியும் என்று கூறிய ட்ரம்ப், பதிலுக்கு மெட்வெடேவ் இறந்த கை குறித்து பேசியதும், ’வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை, மேலும் அவை பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும், இது அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக இருக்காது என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.
அத்துடன், மெட்வெடேவ் அணு ஆயுதம் குறித்து மறைமுகமாகப் பேசியதால் கோபமடைந்த ட்ரம்ப், உடனே, இரண்டு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யாவிற்கு அருகில் நிறுத்த உத்தரவிட்டதுடன், நாங்கள் எப்போதும் தயாராக இருக்க விரும்புகிறோம். அதனால் நான் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளேன் என்றும் கூறினார்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வீடியோ
🚨USA DEPLOYS NUCLEAR SUBMARINE NEAR RUSSIA
— Alice 🇷🇺 🇵🇸 (@alice_zez) August 1, 2025
High alert in baltic region as Trump orders nuclear submarines move near Russia.
The Russian Borei Class submarines equipped with thermonuclear Bulava missiles are now close to the US coast. pic.twitter.com/8Z3UdQh1Zv
இந்நிலையில், அமெரிக்காவுக்கு அருகில் அணு ஆயுத Bulava ஏவுகணைகளை வீசும் திறன்கொண்ட Borei-class submarine என்னும் ரஷ்யாவுக்குச் சொந்தமான இரண்டு நீர்மூழ்கிகள் அமெரிக்கக் கரைக்கு அருகில் நிற்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா ரஷ்யாவுக்கு அருகில் அணு ஆயுத நீர்மூழ்கிகளை அனுப்பியதால், பதிலடி கொடுக்க ரஷ்யா தனது அணு ஆயுத நீர்மூழ்கிகளை அமெரிக்காவின் அருகில் அனுப்பியுள்ளதோ என்னும் அச்சத்தை அந்த வீடியோ உருவாக்கியது.
ஆனால், உண்மையில் அது 2018ஆம் ஆண்டு ரஷ்யா வெள்ளைக் கடலில் நிகழ்த்திய ஏவுகணை சோதனையைக் காட்டும் வீடியோவாகும்.
ஆக மொத்தத்தில், இரண்டு வல்லரசுகளும் யோசிக்காமல் வார்த்தைகளை விடுவதால், தேவையற்ற பதற்றங்கள் உருவாகிவருவதை மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |