வாஷிங்டனில் அவசரநிலை அறிவிப்பு., 800 பாதுகாப்பு படையினரை நிறுத்திய ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வாஷிங்டன் நகரத்தில் 'குற்ற அவசரநிலை' என அறிவித்து, 800 தேசிய பாதுகாப்பு படையினரை (National Guard) நகரம் முழுவதும் நியமித்துள்ளார்.
பாதுகாப்பு படையினர், நகர பொலிஸாருடன் இணைந்து நினைவுச்சின்னங்கள் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு ரோந்துகள், பெடரல் கட்டிடங்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாப்பது, போக்குவரத்து கட்டுப்பாடு போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.
அவர்களுக்கு யாரையும் கைது செய்யும் அதிகாரம் இல்லை, ஆனால் சட்ட அமலாக்கத்திற்கு உதவும் வகையில் தற்காலிகமாக தடுத்து வைக்க முடியும்.
இந்நிலையில், நேற்றிரவு வாஷிங்டனில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 29 பேர் நாட்டில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் ஆவர்.
இப்போது, 1,650-க்கும் மேற்பட்டோர் இந்த சட்ட அமலாக்க நடவடிக்கையில் பங்கேற்று வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் நகரத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அவர் கூறியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், பலர் விமர்சனம் செய்துள்ளனர். DC பொலிஸின் தரவுகளின்படி, 2024-ல் வன்முறை குற்றங்கள் குறைந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி, இது அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை என கூறப்படுகிறது.
நகரத்தை மீட்டெடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என ட்ரம்ப் கூறியுள்ளார். பாதுகாப்பு படையினர், சட்டம் மற்றும் ஒழுங்கு மீண்டும் நிலைநிறுத்தப்படும் வரையில் நகரத்தில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Donald Trump, Washington DC, National Guard deployment, Washington DC Crime Emergency, Trump Deploys 800 National Guard troops