உக்ரைன் எதிர்க்கட்சித் தலைவர்களை ரகசியமாக தொடர்புகொண்ட ட்ரம்புக்கு மூக்கறுப்பு
உக்ரைன் மக்களுக்குள் பிளவை உண்டாக்கும் ட்ரம்பின் சூழ்ச்சி தோல்வியடைந்துள்ளது.
ஆம், உக்ரைன் எதிர்க்கட்சித் தலைவர்களை ரகசியமாக தொடர்புகொண்ட ட்ரம்புக்கு அவர்கள் ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர்களை ரகசியமாக தொடர்புகொண்ட ட்ரம்ப்
ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற படாத பாடு படுகிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்!
அதற்காக அவர் திரைமறைவு விடயங்களில் கூட இறங்கத் தயாராகிவிட்டார் என்பதை சமீபத்திய சம்பவம் ஒன்று உறுதி செய்துள்ளது.
அமைதி வேண்டும் என்பதற்காக நாட்டின் ஒரு சிறு பகுதியைக் கூட விட்டுக்கொடுக்கமுடியாது என்பதில் உறுதியாக நிற்கிறார் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.
ஆகவே, குறுக்கு வழியில் இறங்கியாவது நான் நினைத்ததை நடத்திவிடத் துடிக்கிறார் ட்ரம்ப். தான் சொன்னபடி தலை ஆட்டாததால் ஜெலன்ஸ்கியை ட்ரம்புக்கு பிடிக்கவில்லை.
ஏற்கனவே ஜெலன்ஸ்கியை முறைப்படி தேர்தல்களை நடத்தாத சர்வாதிகாரி என விமர்சித்துள்ள ட்ரம்ப். அவரை அகற்றிவிட்டு, தனக்கேற்ப தலையாட்டும் ஒருவரை ஜனாதிபதியாக உட்காரவைக்கவும் விரும்புவதுபோல் தெரிகிறது.
அதற்காக, ரகசியமாக உக்ரைன் எதிர்க்கட்சியினரை தொடர்புகொண்டுள்ளார் ட்ரம்ப்.
ட்ரம்புக்கு மூக்கறுப்பு
ஆனால், எதிர்க்கட்சியானாலும், தங்கள் நாட்டின் ஒற்றுமையையும் கௌரவத்தையும் விட்டுக்கொடுக்க உக்ரைனில் யாரும் தயாராக இல்லை.
ஆம், ட்ரம்ப் அணியினர் உக்ரைன் எதிர்க்கட்சித் தலைவரான Yulia Tymoshenkoவையும், உக்ரைன் முன்னாள் ஜனாதிபதியான Petro Poroshenkoவையும் ரகசியமாக தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளனர்.
அவர்களிடம், போர் நடக்கும்போதே உக்ரைனில் தேர்தல் நடத்த முடியுமா என்பது குறித்து விவாதித்துள்ளது ட்ரம்ப் தரப்பு.
ஆனால், நாடு ரஷ்யாவுடனான போரில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அவர்கள் இருவருமே எதிர்ப்பு தெரிவிக்க, ட்ரம்ப் தரப்புக்கு ஏமாற்றமாகியுள்ளது.
நாங்கள் எதிர்க்கட்சிகளாகவே இருந்தாலும், உக்ரைனுக்கான ஆதரவை தொடரும் வகையில், வெளிப்படையாகவும், ஒளிவுமறைவுமின்றியே அமெரிக்கக் கூட்டாளர்களுடன் பணியாற்றுவோம் என்று கூறிவிட்டார் , உக்ரைன் முன்னாள் ஜனாதிபதியான Petro Poroshenko!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |