புடினுடன் விவாதித்தேன்... உக்ரைன் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட புதிய தகவல்
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்குவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேசியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உடனடியாக பேச்சுவார்த்தை
இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தமது சமூக ஊடக பக்கத்தில் தெரிவிக்கையில், எங்கள் அமைப்புகள் உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்,
மேலும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை அழைத்து பேச்சுவார்த்தை தொடர்பில் தகவல் தெரிவிப்பதன் மூலம் முறைப்படி தொடங்க இருக்கிறோம் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, புடினும் ட்ரம்பும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தொலைபேசியில் பேசியதாகவும், இருவரும் சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் ரஷ்ய ஜனாதிபதி மாளிகை கிரெம்ளின் உறுதி செய்துள்ளது.
உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதாக ட்ரம்ப் நீண்ட காலமாக கூறி வருகிறார், இதை எப்படிச் சாதிப்பார் என்று அவர் கூறவில்லை. இதனிடையே, ட்ரம்பின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவிக்கையில்,
சொந்தம் கொண்டாட முடியாது
2014 க்கு முந்தைய உக்ரைனின் எல்லைகளைத் திரும்பப்பெறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று என தெரிவித்திருந்தார். அதாவது கிரிமியா பிராந்தியத்தை ரஷ்யா கைப்பற்றியதை இனி உக்ரைன் சொந்தம் கொண்டாட முடியாது என்றே Pete Hegseth மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் அந்தஸ்தை அளிப்பது போருக்கான தீர்வாக அமெரிக்க நிர்வாகம் கருதவில்லை என்றே கூறப்படுகிறது.
உக்ரைன் ஆதரவு நாடுகளின் உறுப்பினர்கலுடன் நேட்டோ தலைமையகத்தில் சந்திப்பு ஒன்றை முன்னெடுத்த Pete Hegseth உக்ரைன் போர் தொடர்பில் வெளிப்படையாக பேசியுள்ளார். குறித்த சந்திப்பில் உக்ரைன் ஆதரவாக 40 நாடுகள் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |