AI-க்கு எதிரான அபத்தமான சதி! செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஒழுங்குமுறைக்கு டிரம்ப் எதிர்ப்பு
Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆந்த்ரோபிக் CEO-யின் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி(Dario Amodei) சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.
செயற்கை நுண்ணறிவுத் துறையின் கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் மனித குலத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடும் அபாயம் இருப்பதாகவும் டாரியோ அமோடி எச்சரித்து இருந்தார்.
We Must Pace the Frontier: I’ve written a new essay on why the AI industry should slow down, with a three-part plan for doing so.
— Dario Amodei (@DarioAmodei) September 12, 2026
Anthropic is unilaterally committing to the first of these steps. We’ll provide third-party evaluators with permanent, employee-level access to our…
ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி முன்வைத்த செயற்கை நுண்ணறிவுக்கான கூடுதல் பாதுகாப்பு தேவைகளை ஓபன் ஏஐ(Open AI) நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோரும் அங்கீகரித்து இருந்தனர்.
டிரம்பின் நிலைப்பாடு
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி முன்வைத்த கடுமையான தடைகள் தொடர்பான தேவைகள் மற்றும் வாதங்களை டிரம்ப் கடுமையாக நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட கருத்தில், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி(Sick Conspiracy) என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி-வை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, டாரியோ அமோடியை கிண்டல் செய்யும் வகையில், “அவர் தன்னை பரிசுத்தமான சிறிய தேவதை போல் காட்டிக் கொள்வதாக” குற்றஞ்சாட்டியுள்ளார்.