டிரம்பின் கோல்ப் மைதானத்தில் பரபரப்பு: மோதலில் ஈடுபட்ட மர்ம நபர் கைது
டிரம்ப் நேஷனல் டோரல் கோல்ப் மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட மர்ம நபர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிரம்பின் கோல்ப் மைதானத்தில் பரபரப்பு
புளோரிடாவில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான டிரம்ப் நேஷனல் டோரல்(Trump National Doral) கோல்ப் மைதானத்தில் பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டளையை மீறி மோதலில் ஈடுபட்ட மர்ம நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
#AN7Internacionales | El Servicio Secreto de Estados Unidos detuvo este sábado a un hombre en el club de golf Trump National Doral Miami, luego de que activara los detectores de metales y mostrara una actitud violenta contra un agente.
— Antena Noticias 7 (@ANoticias7) May 3, 2026
El sospechoso fue acusado de conducta… pic.twitter.com/ZjzCpHaFMI
செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணிக்கு மைதானத்தின் பாதுகாப்பு சோதனை சாவடியில் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக சம்பந்தப்பட்ட நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர், பாதுகாப்பு அதிகாரிகளின் சட்டப்பூர்வமான உத்தரவுகளை பின்பற்றாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அவர் மீது தற்போது ஒழுங்கற்ற நடத்தை மற்றும் வன்முறையின்றி அதிகாரிகளுக்கு தடையாக இருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் டோரல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தினால் கோல்ஃப் மைதானத்தின் பாதுகாப்பிற்கும், அங்குள்ள முக்கிய நபர்கள் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அந்த இடத்தில் இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
டோரல் காவல்துறையினர் கூடுதல் விசாரணையை நடத்தி வரும் நிலையில், கைது செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக அவர்கள் வெளியிடவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |