ஈரானுக்கு ரஷ்யாவும், சீனாவும் உதவுகிறதா? டிரம்ப் சந்தேகம்
Trump Downplays Russia and China are Aiding Iran: ஈரானுக்கு ரஷ்யாவும், சீனாவும் உதவுவதாக வெளியான தகவல்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
சந்தேகம் எழுப்பிய டிரம்ப்
ஈரானுக்கு வல்லரசு நாடுகளான ரஷ்யாவும், சீனாவும் உதவுவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
ஈரானுக்கு உதவி செய்வதன் மூலம் ஏற்படும் பாதகமான விளைவுகளை இரண்டு நாடுகளும் விரும்ப மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து ஈரானுக்கு கிடைக்கும் உதவிகள் குறித்து தகவல்களை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறைத்து மதிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை ஈரானுக்கு இரு நாடுகளும் உதவிகள் செய்தாலும் அவை குறைந்த அளவிலேயே இருக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அவர்கள் இழப்பதற்கு நிறைய உள்ளன. அவ்வாறு அவர்கள் உதவி செய்தாலும் அது நமக்கு விரைவாக தெரியவந்து விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.