பிரதமர் ஸ்டார்மரின் உக்ரைன் திட்டத்தை மோசமாக விமர்சித்த ட்ரம்பின் சிறப்பு அதிகாரி
மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஜனாதிபதி ட்ரம்பின் சிறப்பு தூதரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முதன்மை அதிகாரியுமான Steve Witkoff உக்ரைன் தொடர்பில் பிரித்தானியப் பிரதமரின் முன்னெடுப்புகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
உக்ரைனில் அமைதிப்படை
பிரித்தானியப் பிரதமர் சர்ச்சில் போன்று நடந்து கொள்கிறார் என குறிப்பிட்ட அவர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மிக புத்திசாலி என புகழ்ந்துள்ளார்.
உக்ரைனில் அமைதிப்படையை அனுப்பும் பிரித்தானியா மற்றும் பிராச்ன்ஸின் திட்டத்தை விமர்சித்துள்ள 68 வயதான Steve Witkoff அமெரிக்காவின் கோடீஸ்வரர்களில் ஒருவரும் ஜனாதிபதி ட்ரம்பின் நண்பரும் ராஜதந்திர அனுபவம் ஏதும் இல்லாதவருமாவார்.
இறுதிவரை போரிடுவதற்குப் பதிலாக பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியை அடைய வேண்டும் என தெரிவித்துள்ள அவர், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா முன்வைக்கும் கருத்துகளை அவர் நம்புவதாகவே குறிப்பிட்டுள்லார்.
ரஷ்ய சாம்ராஜ்யம்
அத்துடன், உக்ரைனில் புடின் விரும்பியதை ஏற்கனவே பெற்றுவிட்டார் என்றும் Steve Witkoff உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், ஐரோப்பா முழுவதும் கைப்பற்ற புடின் விரும்புவது விபரீதமான முடிவு என்று தாம் கருதியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தமக்கு அப்படி ஒரு கனவு இருப்பதாக புடின் ஏற்கனவே தெரிவித்துள்ளார். ரஷ்ய சாம்ராஜ்யத்தை மீண்டும் உருவாக்கவும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நேட்டோவை வெளியேற்ற விரும்புவதாகவும் புடின் கூறியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு உக்ரைன் மீது ஏன் இந்த அக்கறை என்றும் Steve Witkoff கேள்வி எழுப்பியுள்ளார்.
உக்ரைன் மீது புடினுக்கு என்ன திட்டம் இருந்ததோ அதை அவர் சாதித்து விட்டார். இனி ரஷ்யா இந்த பிராந்தியங்கள் மீது அதிகாரம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |