போர் நிறுத்தத்தை நீட்டித்த ட்ரம்ப் - பேச்சுவார்த்தைக்கு ஈரான் விடுத்துள்ள நிபந்தனை
போர் நிறுத்தத்தை ட்ரம்ப் நீட்டித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
போர் நிறுத்தம் நீட்டிப்பு
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கிய போர், பாகிஸ்தானின் மத்யஸ்தத்தின் கீழ் 2 வார காலம் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்கா ஈரான் இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், போர் நிறுத்தம் முடிவடைதற்குள் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டது.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் உள்ளிட்டோர் பாகிஸ்தானுக்கு செல்ல தயாராகவே இருந்தார்.
போர் நிறுத்தம் முடிவடைவதற்குள் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், ஈரான் மீது குண்டுகள் வீசப்பட்டும் உள்ளிட்ட மிரட்டல்களை விடுத்தது வந்தார்.
ஆனால், ஈரானிய கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியது போர் நிறுத்த மீறல் என ஈரான் கண்டித்து, அமெரிக்காவின் நிபந்தனைகள் ஏற்கும் வகையில் இல்லை எனக்கூறிய பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள மறுத்தது.

இந்நிலையில், ஈரான் ஒப்பந்தத்திற்கு ஒரு முன்மொழிவை வழங்க கால அவகாசம் வழங்கி, போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஆனால் ஹார்முஸ் நீரிணை மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடரும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் நிபந்தனை
ஆனால் இந்த போர் நிறுத்தத்தை நீடித்தது அர்த்தமற்றது என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரின் ஆலோசகரான மஹ்தி மொஹம்மதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "டிரம்பின் போர்நிறுத்த நீட்டிப்பு அர்த்தமற்றது. தோற்கும் தரப்பு நிபந்தனைகளை விதிக்க முடியாது. முற்றுகையைத் தொடர்வது குண்டுவீச்சிலிருந்து வேறுபட்டதல்ல, அதற்கு இராணுவப் பதிலடி கொடுக்கப்பட வேண்டும்.
تمدید آتش بس از جانب ترامپ هیچ معنایی ندارد. طرف بازنده نمی تواند شرایط تعیین کند. تداوم محاصره تفاوتی با بمباران ندارد و باید به آن پاسخ نظامی داد. ضمن اینکه تمدید آتش بس از جانب ترامپ قطعا به معنای خرید زمان به منظور ضربه غافلگیرانه است. زمان ابتکار عمل ایران است.
— Mahdi Mohammadi (@mmohammadii61) April 21, 2026
மேலும், டிரம்பின் போர்நிறுத்த நீட்டிப்பு என்பது, ஒரு திடீர் தாக்குதலுக்கு நேரம் வாங்குவதற்கான ஒரு தந்திரம் என்பது நிச்சயம். ஈரான் முன்முயற்சி எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.
அதே போல், போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஈரான் கோரவில்லை என்றும், அமெரிக்க முற்றுகையை பலவந்தமாக உடைப்போம் என்ற தனது முந்தைய அச்சுறுத்தல்களை அது மீண்டும் வலியுறுத்தியதாகவும் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Iran Ready for Talks Once US Lifts Naval Blockade, Envoy Says
— Tasnim News Agency (@Tasnimnews_EN) April 22, 2026
Iran’s UN Ambassador Amir Saeid Iravani stated that Tehran is prepared to negotiate immediately after the United States ends its naval blockade, emphasizing that Washington must first halt its "ceasefire violations." pic.twitter.com/GOxEO8yqzS
அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கியவுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருப்பதாவும், அமெரிக்கா முதலில் தனது "போர் நிறுத்த மீறல்களை" நிறுத்த வேண்டும் எனவும் ஈரானின் ஐ.நா தூதர் அமீர் சயீத் இரவானி கூறியுள்ளார்.
தற்போது, ஓமனுக்கு வடகிழக்கே 15 கடல் மைல் (27 கி.மீ) தொலைவில் உள்ள ஒரு கொள்கலன் கப்பல் மீது ஈரானின் IRGC கடற்படை தாக்குதல் நடத்தியதாகவும், அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் பிரித்தானிய கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் (UKMTO) தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |