அமெரிக்க அணுசக்தியை அதிகரிக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து
அமெரிக்காவின் அணுசக்தியை அதிகரிக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அணு உற்பத்தி நிலையங்கள் மற்றும் ரியாக்டர் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் முறையை விரைவுபடுத்தும் செயற்திட்டத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.
தற்போது ஒரு அணு திட்டத்திற்கு அனுமதி பெற 10 வருடங்கள் வரை ஆகக்கூடும். புதிய ஆணை இம்முறையை 18 மாதங்களில் முடிக்க வகை செய்யும்.
ஏன் இந்த மாற்றம் முக்கியம்?
AI., டேட்டா சென்டர்கள் என அமெரிக்காவின் டிஜிட்டல் வளர்ச்சி பெரிதும் அதிகரித்துள்ளது. இதற்கான மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், அணு சக்தி ஒன்றே நிலையான மற்றும் பெரும் சக்தியாக கருதப்படுகிறது.
அணு உற்பத்திக்கு புதிய ஊக்குவிப்பு
இந்த ஆணையின் கீழ், அமெரிக்க அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் (NRC) தனது பணியாளர்கள் மற்றும் செயல்முறைகளை மறுபரிசீலனை செய்யும். ரியாக்டர் திட்டங்களை ராணுவ தளங்களிலும் நிறுவக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் தாக்கம்
சில ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், அணுமின் நிலையங்கள் காற்று மாசுபாடு ஏற்படுத்தாது என்பதால் ஆதரிக்கின்றனர்.
ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கதிர்வீச்சு கழிவுகள் மற்றும் பாதுகாப்பு குறைகளை எதிர்த்து வருகின்றனர். குடியரசுக்கட்சி அணு சக்தியை தேசிய பாதுகாப்பின் முக்கிய கூறாக காண்கின்றது.
இக்கட்டளை அமெரிக்க அணுசக்தி துறைக்கு கடந்த ஒரு தலைமுறைக்குப் பிறகு வருகை தரும் மிக முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது. AI வளர்ச்சிக்கும், நாட்டின் மின் தேவைகளுக்கும் தீர்வு காணும் இந்த அணு சக்தி முயற்சி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump nuclear policy 2025, US AI energy needs, AI power infrastructure, fast-track nuclear licensing, American nuclear renaissance, NRC reforms 2025, uranium production USA, AI-driven energy policy, nuclear power and data centers, Trump executive orders energy.