மூன்றாவது அல்ல, நான்காவது முறையாக ஜனாதிபதியாக விருப்பம் காட்டும் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது Truth Social தளத்தில் இட்ட பதிவில், “நான் நான்காவது முறையாக போட்டியிடலாமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பு ஒருவரை அதிகபட்சம் இரண்டு காலங்களுக்கு மட்டுமே ஜனாதிபதியாக அனுமதிக்கிறது.
இருப்பினும், ட்ரம்ப் தொடர்ந்து மூன்றாவது, நான்காவது பதவிக்காலம் பற்றிய சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார்.
2025 நவம்பரில், ட்ரம்ப் “TRUMP 2028, YES!” என எழுதப்பட்ட AI மூலம் உருவாக்கப்பட்ட படத்தை வெளியிட்டு, தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார்.

அதேபோல், “Trump 2028 (Rewrite the Rules)” எனும் வாசகத்துடன் தொப்பிகள், டி-ஷர்ட்கள் விற்பனை செய்யப்பட்டது.
ட்ரம்ப், 2020 தேர்தல் “முழுமையாக மோசடி செய்யப்பட்டதாக” மீண்டும் கூறி, “மூன்றாவது முறை என்பது உண்மையில் தனக்கு நான்காவது முறை” என வாதிட்டார். ஆனால், 22வது திருத்தச்சட்டம் தெளிவாக, “ஒருவரை இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கலாம்” எனக் கூறுகிறது.
அவரது “record numbers all over the place” என்ற கூற்றுக்கு மாறாக, சமீபத்திய AP-NORC கருத்துக்கணிப்பில், அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர் மட்டுமே அவரது இரண்டாவது கால ஆட்சியை ஆதரிக்கின்றனர்.
பெரும்பாலானோர் பொருளாதாரம், குடியேற்றம், வாழ்க்கைச் செலவு போன்ற முக்கிய பிரச்சினைகளில் அவர் தோல்வியடைந்ததாகக் கருதுகின்றனர்.
இந்நிலையில், ட்ரம்பின் “நான்காவது காலம்” குறித்த சிந்தனை, அமெரிக்க அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. அரசியலமைப்பு தடைகள் இருந்தாலும், அவரது ஆதரவாளர்கள் “TRUMPLICANS” என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |