EB-5 விசா ரத்து... 5 மில்லியன் டொலருக்கு குடியுரிமை: பணக்காரர்களை ஈர்க்கும் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பணக்கார புலம்பெயர் மக்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதை எளிதாக்க திட்டமிட்டுள்ளதுடன், 5 மில்லியன் டொலர் கட்டணமும் விதித்துள்ளார்.
மில்லியன் அனுமதி
புதிய இந்தத் திட்டம் வெளிநாட்டினருக்கு கிரீன்-கார்டு வதிவிட நிலை மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கான பாதை என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு மில்லியன் அனுமதிகள் விற்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தத் திட்டம் தேசிய கடனை விரைவாக அடைக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், EB-5 விசா திட்டத்தை ரத்து செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க வணிகங்களில் முதலீடு செய்வதாக உறுதியளிக்கும் வெளிநாட்டினருக்கு EB-5 திட்டம் கிரீன் கார்டுகளை வழங்குகிறது.
தற்போது அந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிதாக கோல்டு கார்டு திட்டத்தை ட்ரம்ப் அறிமுகம் செய்ய இருக்கிறார். அதற்கு 5 மில்லியன் டொலர் கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இந்தத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் இரண்டு வாரங்களில் வெளிவரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யர்களும் இந்தத் திட்டத்தில் விதிவிலக்கல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |